மாடிவீடிருக்கிறது மங்காப் புகழிருக்கிறது
கூடியே சொந்தங்கள் குழுமியிருக்கின்றன
ஓடிஆடி சேவகம் செய்ய ஆட்களுமிருக்கிறார்கள்
கோடியிலே செல்வம் குவிந்தேகிடக்கிறது ஆனாலும்
வாடியேகிடக்கிறது மானம் வசந்தத்தை எண்ணி
பாடியாடிப் பறந்து திரிந்த பருவகாலத்தை
நாடியே பின்னோக்கி நினைவுகள் நகர்ந்திட
தேடியபுன்னகை மலருது புதையலின் இனிமையில்


0 comments:
Post a Comment