அகிலமிதில் எம் அவதாரம் அதற்காய்
அந்திபகல் கண்விழித்து ஐயிரண்டு திங்களாய்
அகத்தினிலே எமைதாங்கி அன்புதனை அமுதாக்கி
எமை ஆளாக்கிய அன்னையே
உலகத்தில் உவமைசொல்ல உமக்கு ஈடேது
தவிழும் வயதில் தாய் மடி தந்தாய்
இளமைப் பருவத்தில் இமையாய் இருந்தாய்
துன்பம் தொடாமலிருக்க தூக்கத்தினை மறந்தாய்
ஆயுள்வரை ஆருயிராய் அன்பில் அமுத சுரபியாய்
ஆளும் அன்னை ஒரு பிரபஞ்சமே
அனுதினமும் வாழ்த்தி வணங்குகின்றோம்......


0 comments:
Post a Comment