RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

நிலவின் ரகசியம்....

 


மறைக்கப் பட்ட அழகின் பொக்கிஷங்கள்

மனிதனால் எப்போதும் தேடப்படுகின்றன -இதற்கு

நிலாவுமட்டும் என்ன விதிவிலக்கா? -ஆனாலும்

முடியவில்லை முழுமதி அவளின் முழுமையை அறிய

இரவினில் பெளர்ணமி வெளிச்சமும்

இனிமைக்கு அவள் நிழழும் தனிச்சுகம்

வானவெளியில் அவள்  ஓர் வெள்ளித்தட்டு

வாய்திறக்க மறுக்கும் குழந்தைகளுக்கே மந்திரத்தட்டு

பூமியிலிருந்து பார்த்து இரசித்த காலமொன்று

போதும் அதுவென்று வானுக்கே வந்தாலும்

வானத்தில் உன் அழகும்  -நீ

வழங்க மறுக்கும் இரகசியங்களும் 

நீண்டுகொண்டே செல்கின்றன  -நீ 

வாழும் வான் பரப்புப்போல...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment