RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

வாழ்வினில் வசந்தமாய் வந்தவளே......




வான் பிளந்து செல்வம் எல்லாம் 

வாசல் வந்த மகிழ்ச்சியில் தூகலிக்கின்றது 

அவன் உள்ளம் குலம் விளக்க 

 குவளையத்தில் அவதரித்த குலவிளக்கு அவளென...



அழகுசாதனமில்லாமலே அலங்கரித்த அழகு வதனம்

சொல்லாமலே சோகத்தை கலைத்திடும் சொல்லின் மென்மை

பொன்நகையோடு போட்டியிட்டு பூமியில் இடம்பிடித்த

புன்னகை இத்தனையும் பெண்மை அவள் பொக்கிசமாம்



விலை மதிக்க முடியாத பெறுமதிகள் எத்தனையோ

அத்தனையும் தன் வசமாய் வசந்தகால 

புதுமலராய்  புகுந்த வீட்டு வருமதியாய்

வாழ்வின் முழுமதியாய் வசந்தமாய் வந்தவளே...... 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment