RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

என் இதயத் துடிப்பின் ராகம் நீயே......

 





வசந்தம் எனும் சுகம் காண
பாசம் என்னும் ஸ்வரங்கள்
காலம் என்னும் தாளத்தோடு தப்பாது
சுருதியில் சுய விருப்புடன்
இணைந்த இதயங்களிலிருந்த
இசை மீட்ட காத்திருக்கையிலே
ஸ்வரங்கள் இடம் மாறியதால்
இசை வரும் திசையிலே
இனிமையும் மறந்தது....
இதமான பூங்காற்றுடன்
இனிய ராகத்தையே
தினம் தினம் மீட்டியவள்(ன்) - இன்று
ஸ்வரங்களை தொலைந்து
சுருதியில் சேர்ப்பதால்
இசை தான் பிறக்குமா?
சுகம் அது கிடைக்குமா?
ராகங்கள் பலவிதம்
அதன் ரசனைகள் பல சுகம்
என் இதயத் துடிப்பின் தாளத்துக்கு
ஒத்துப்போகும் ராகம் நீயே என்றும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்பு...

 


சொந்தபந்தம் எதுவுமின்றி

சொந்த கதைகள் பல பேசி

நித்தம் நித்தம் நீண்ட தூரம்

நினைவுகள் பல பகிர்ந்தோம்...!

உன் சுமைகள் உட் புதைந்தே

என் பாரம் உன்தோள் தாங்கி-நாம்

ஏற்றம் காண்பதற்காய்

என்னுடனே உழைக்கின்றாய்...!

உலகங்கள் பல தாண்டிவந்து

உருவங்கள்  எதுவும் பாராது

உறவேதும் இல்லாமால்

உள்ளத்து உணர்வால்

இணைந்திட்ட எம் நட்பு

உயிர் பிரியும் வரை பிரியாது..!


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதயங்கள் இடம் மாறுமோ .....




 உள்ளத்தால் இணைந்து
 உறவில் கலந்திட்ட 
உள்ளங்கள் இரண்டிங்கு 
உண்மை உணர்வினை சொல்லிட 
உதடுகள் துடிக்குது
 உள்ளே ஏதோ தடுக்குது 
 காதலின் விதியா? 
காலத்தின் சதியா? 
உணர்ந்திட்ட போதிலும் 
உரைக்க மறுக்குது 
உள்ளம் உண்மைதனை 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புரட்சியை முயற்சியால் செய்......




 வாழ்வின் விதியா? காலத்தின் சதியா?

வாழ்க்கையின் நியாதியா? எம் நிலைதான் என்ன?

எண்ணங்கள் பலவும்  எழுவதில் தவறில்லை

அதை ஏற்று நடப்பது அவரவர் கைகளிலே

ஏக்கங்களுக்குள்ளே சிக்கித் தவித்து

எல்லைகளை உருவாக்கி திறனை முடக்காதே

சிற்சில மாற்றம் சிலநேரம் தயக்கம்  ஆனாலும்

ஓயாது உழைக்குது முயற்சி உள்ளுக்குள்

நற்செயலுடன் இணைந்தே சிந்தையும் பயணிக்க

வரட்சியில் மலர்ச்சி பெறும் மரம்போல

 புரட்சியை  முயற்சியால் செய்வோம் இன்றே



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலம் களவாடிய இளமை நினைவுகள் ....

திரும்பிச் செல்ல முடியாத

தொலைந்த காலமென்றாலும்

திரும்பத் திரும்ப நினைக்கத் தூண்டும்

தீராத பொக்கிஷமாய்

நெஞ்சுக்குள் அது உயிர் வாழ்கிறது

காலம் கடந்துவிட்டது

கனவுகள் கரைந்துவிட்டன

நேற்றைய பாதைகள்

இன்றோ நினைவுகளாகிவிட்டன

திரும்ப வராத காலம் அது ஆனால்,

திரும்பத் திரும்ப வாழ வைக்கும் காலம் அது


காலம் களவாடிய இளமை

நினைவுகள் வழியே மீண்டும் கிடைக்கிறது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS