RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

மறக்க முடியாத வசந்தம்........



கல்லூரி காலமதில்

கடைசி மணி அடித்ததுமே

கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு

கடைசித்தெரு வரை

காவலுக்கு வந்து செல்வார்

இடைவழியில் இளைஞர்யாரும்

இம்சை எதும் செய்து விட்டால்

இன்னொரு நாள் காத்திருந்து

இருட்டடி கொடுத்திடுவார்

சந்தர்ப்பம் பார்த்தே

சமூகப் பணி இணைந்து

இன் முகத்துடனே

இனிதே பணி செய்தமையால்-அனைவர்

இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

உறவினர் கூடவே

உயிர் தோழிகளும் மட்டுமல்ல

உடன் பிறப்புகளும் இணைந்தே

பெருமிதத்துடனே காட்டிவிட்டார்

 பெற்றோரும்  நாம் காதலுக்கு

பச்சைக்கொடி இதுவே 

மறக்க முடியாத வசந்தம் என் வாழ்வில்.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment