RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

கனவுகள் மெய்ப்படும் ....

 


உன் நினைவுகளோடே விடிகிறது

ஒவ்வொரு விடியலுமே

நாம் நினைவுகளை நியமாக்க முயற்ச்சிக்கிறேன்  - என்

ஒவ்வொரு முயற்ச்சியிலுமே

மலரும் பூவெல்லாம் ஒரு நாள் வடித்தான் ஆகனும்

என்பது விதியானாலும் -காயாகி கனியாகி

மரதிலிருந்து விழும் கனிகள்

மண்ணோடு போராடி மீண்டும் விருட்சமாவதுபோல்

நாம் நினைவுகள் நிஜமாகி 

கனவுகள் மெய்ப்படும் காலத்திற்க்காய் காத்திருக்கிறேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விதி போடும் பயணத்தில்....



 விதி போடும் பயணத்தில்

வழியறிய பயணிகள் நாம்

காலத்தின் பாதையில் நகரும்-  நாம்

நாட்களின் எண்ணிக்கை நாம் அறியோம்,

பயணங்கள் பலவிதம் அதற்கேற்ப

பாதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்,

நாம் பயணங்கள் ஒரு நாள் முடியலாம் -ஆனால்

பாதைகள் என்றும் முடிவதில்லை,

விதிவரைந்த பாதையிலே 

வலிகளோடு தொடருது பல பயணங்கள் இங்கே......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணாமூச்சி ஆட்டம் .....



விழி வழியே வந்த காதல்

பாதி வழியினிலே போகுமென்றோ

பாசம் தந்து கொல்லுமென்றோ

பழகும் போது புரிந்ததில்லை

மண்டபமே மகிழ்ச்சியிலே

மந்திரங்கள் ஒலிக்கையிலே

மணமகனின் அருகினிலே

மங்கை இவள் தவிப்பதனை

மாற்றிட தான் மார்க்கம் உண்டோ

கனவுகளின் கைகளிலே மனதை கொடுத்துவிட்டு

காலத்தின் பாதையிலே தொடர்கின்றாள்-வாழ்வினையே

கண்ணாமூச்சி ஆட்டமாய்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வார்த்தையில்லா மொழி.

 


அறியாத ஓர் சுகம்

அளவில்லா ஆனந்தம்

அன்பாலே புடைசூழ - உணர்கின்றேன்

அகிலமிதில் தினம் தினம் புதுவசந்தம்...

எவரிடத்தும் கண்டதில்லை 

இம் மொழியை இதுவரையில் 

வார்த்தைகளே இல்லமல் 

வகை வகையாய் கதைபேசும் - உன்

விழிமொழியை நானின்றி யாரறிவார்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்பிக்கை நம்கையில்...



 இறகுகள் இருந்தால்

இமயத்தை தொடுவேன் என்பது எதிர்பார்ப்பு- என்

இருகைகள் போதும் இருப்பதைக் கொண்டு

இமயத்தின் உச்சியை அடைவேன் என்பது நம்பிக்கை

எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை - அதை

எதிர்கொள்ளும் விதத்தில் இருக்கிறது வெற்றி

நமக்குள்ளே பிறந்து நாம் கைபிடித்து

நம்மையே வழிநடத்துவது நம்பிக்கை.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அனல் அலை...

 



தங்க முடியவில்லை ஐயா

தவிக்கின்றோம் உன் வெப்பத்தால்

அறிவியல் என்னதான் அலைவீசி வளர்ந்தாலும் -உன்

அனல் வீசும் வெப்ப அலைக்கு

அவை எல்லாம் ஒரு தூசு

பொழுது சாயும் நேரம் கூட -உன்

கோபத்தின் வேகம் குறையாதாது ஏனோ?

அலையில் அகப்பட்ட துரும்பு போல -உன்

அனல் அலையால் துடிக்கின்றோம் இங்கு.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகான காலங்கள்...


 காலங்களில் அழகானது

வசந்தகாலம்....

பருவங்களில் அழகானது

பள்ளிக்காலம்.....

பருவகாலம் ஆண்டுக்கு ஒருமுறை

மீண்டும் மீண்டும் மலர்கிறது -ஆனால்

பள்ளிக்காலம் அழகிய நினைவுகளுக்குள்

மீண்டும் மீண்டும் நம்மை அழைத்துச் செல்கிறது....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விடியலை வரவேற்க......




விடியலை வரவேற்க கரையோடு 
தினம் தினம் போட்டியிடும் அலைபோல- என்
 எண்ணக் கனவுகளை சுமந்த வண்ணம்
விடியலை வரவேற்று நானும் மலர்வேன் 
ஒரு நாள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறது
இங்கே காத்திருப்பு...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலையாச்சு...


 வாழ்வின் விதியா? காலத்தின் சதியா?

வாழ்க்கையின் நியாதியா? எம் நிலைதான் என்ன?

நிக்கதியாய் நிக்கின்றோம் நினைவிழந்து தவிககின்றோம்

வேதனைய எம் வாழ்வின் அடுத்த நிலையாச்சு...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வார்த்தைகள் எங்கே.....



 வார்த்தைகள் எங்கே

வலு இழக்கின்றன

வறுமையின்  பிடியிலா? அல்ல

வாய்மையின் தவறிலா?

வார்த்தைகள் எங்கே

 வலுப் பெறுகின்றன?

வைராக்கியத்தின் முடிவிலா? அல்ல

வாதிடும் திறத்திலா?

மொத்ததில் வாழ்க்கை அவரவர் 

வார்த்தையில் தங்கியுள்ளது.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குடியுரிமை வேண்டுமானால் கொடுக்கலாம் சொர்க்கம் ...



பந்தமிது பல்லாண்டு நிலைக்கவென

சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து நிற்க

ஆன்றோர்கள்  ஓடு ஆண்டவனும் ஆசிகள் கூற

இணைத்து வைத்த இரு கைகளில் ஒன்றை இன்று

இடையில் இறைவன் பற்றிக் கொண்டதேனோ

நெஞ்சத்தில் வாழும் அன்பை -எந்த

வஞ்சத்தாலும்  ஏன் பிரபஞ்சத்தாலும்  பிரிக்கேலாது

குடியுரிமை வேண்டுமானால் கொடுக்கலாம் சொர்க்கம் - ஆனால்

அவன் ஆத்மா குடியிருப்பதோ நாம் இதயம்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு வேளை இப்படி இருக்குமோ !...

 




ஒரு வேளை இப்படி இருக்குமோ !

நினைப்பதெல்லாம் யாருக்கும் கிடைப்பதில்லை

ஒருவேளை அப்படியே கிடைத்து விட்டாலும் அதுவும் 

நிலைப்பதில்லையோ?  இதுதான் 

இவ்வுலகில் இயற்க்கையின் நியாதியோ..

ஓஓ அப்படித்தான் இருக்கும் போல.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எம் இதயத்தின் இயக்கமாய் என்றும் நீ...

 


என்னை நானே மறந்தாலும் - உன்

நினைவுகளுடனே நிலைத்திருக்கிறது  நெஞ்சம்

எங்கே முடிவெனத் தெரியமால் - என்

கால்கள் கூட நகர்கின்றன வாழ்க்கைப் பாதையில்

கண்ணில் பதிந்திட்ட உன் உருவை பாதுகாக்க  -என்

கண்கள் கூட கண்ணீர் விட மறுக்கின்றன

உலகத்தில் உன் உருவம்  இல்லமால் மறையலாம் -ஆனால்

என்றும் எம் இதயத்தின் இயக்கமாய்  

எம்முள்  வாழும் உயிர் நீ....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மே -18..................




 எம் இனத்தின் இதயங்களிலிருந்தும்

 அங்கங்களைப் பிளந்தும் ஓடிய குருதியால்

நந்திக்கடலும் நாம் நிலமும்  செம்நதிக்கடலாய்

காட்சியளித்த கொடூர நாள் இது

சண்டைகள் ஓய்ந்து கண்டங்கள் தாண்டி - பல

ஆண்டுகள் கடந்து ஆட்சிகள் மறலாம் -ஆனால்

முண்டங்களாக எம் இனத்தின்

அங்கங்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த

ஆவல காட்சியை எம்மவர் நெஞ்சங்களால்

மறக்க முடியுமா? அல்ல மறக்கதான்  நினைக்குமா?

நாம் கடந்து வந்த  நினைவுகள்  கொடூரமானவை

நாமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கலாம் -ஆனால்

விதைக்கப்பட்ட ஒவ்வாரு உடலும்

விறு கொண்டு எழும்  விருட்சங்களுக்கான அடித்தளம்....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எம் தேசத்துக்கான உழைப்பு இது.......

 



உழைக்கும் காரங்களை 

ஊக்குவிக்கும் மாதம் இது

குருதியை வியர்வையாக்கி தாம்

உறுதியால் ஊதியம் பெறுவார்

உலகத்திலுள்ள அணைவரும்- ஆனால்

குதியால் ஒரு தேசமே

நணைக்கப்பட்ட மாதமும் இதுவே

வாய்க்கால் என்றால்  நினைவுக்கு வருவது

நீர் வழிந்தோட அமைப்பதென்று - ஆனால்

முள்ளிவாய்க்கால் என்றால் நினைவுக்கு வருவதோ

செம்மையாய் ஓடிய எம் இனத்தின் குருதி

குருதியால் உரமூட்டி வளமாக்கப்பட்ட எம் 

தேசத்துக்கான உழைப்பு தேடல் என்றும் ஓயாது.....




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உழைப்பின் உன்னதம்.....





 

மரத்திடமிருந்தோ மனித -  நீ 

மனத்துணிவினைப் பெற்றாய்-அணைத்து

இலைகளும் உதிர்ந்திட்ட போதும் அதையே

உரமாக்கி மீண்டும் தளிர்த்திடும் மரம்போல  -உன்

உயர்ச்சியில் தெரியுது

உழைப்பின் உன்னதம்.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெறுக்கதக்க நினைவுகள் .....

 


வெறுக்கதக்க நினைவுகள் வெறுமனவே 

மனித மனத்துக்கு மட்டுமனதல்ல

வெறிச்சோடி நிற்க்கும் மரம் கூட - ஒரு 

பருவத்தில் சுமைகளை குறைத்திட - தன் 

இலைகளினூடே கவலைகளையும் சேர்த்தே

உதிர்த்து விட்டு நிற்க்கும் காட்சி இது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....



நித்திரையில் எம்மை தட்டி எழுப்பி

சித்திரையின் பிறப்பைச் சொல்லும்

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி..

கோவில்களில் விழாக்கோலம்

இல்லங்களில் கொண்டாட்டம்

உள்ளங்களில் எல்லாம் குதுகலம்..

வழக்கம் போல்தன் இன்றைய விடியலும் - ஆனாலும்

புதுவருடம் புத்தாடை கைவிசேசம் என

மாதங்களின் செல்ல மகள் இவள் எல்லோர்

வாழ்வும் உன் வரவால் வண்ணமாயமாகும் என்பது

ஒவருவார் எண்ணங்களிலும் உதிக்கும் நம்பிக்கை - ஆகையால்

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நினைவுகளுடன் இன்றும் நாம்...

 


நாட்கள் நகர்ந்தோடி பல 

ஆண்டுகள் கடக்கலாம்

கிரமாங்கள் கூட பெரு

நகரங்களுக் ஈடாகலாம் - பலர் 

கனவுகள் நியமாகி வாழ்வினை இரசிக்கலாம்- சிலர்

கனவினை  மறந்து நிஜத்தினில்    நிலைக்காலம்

எத்தனையோ மத்தியிலும் நித்தமும் - எம்

சிந்தனையில் சிறிதெனும் சிதறமால் இருப்பது

அன்பான உன் முகமும் அழகாய் அனுபவித்த நினைவுகளுடனும்

அகிலமதில் நீ ஆவதாரித்த இன் நாளில்  உம் 

நினைவுகளுடன் இன்றும் நாம்...

நிஜத்தில் பயனிக்கின்றோம்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணில் படும் சில வண்ணங்கள்.....

 



வியர்த்துக் களைத்து

விறுவிறு என வீடுநோக்கி ஓடுகையில்

வீதியோரம் கண்டகாட்சி

விழிகளுக்கு ஓர்  இனிய விருந்து

கண்ணில் படும் சில வண்ணங்கள்  - நாம்

எண்ணங்களை கூட வண்ணமாயமக்குகிறது.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒளிகள்.....






 ஒளிகள் பலவிதம் - அவை

ஒளிக்கும் விதம் கூட தனித்தனி விதம்

இயற்ககையாய் ஒளிபவை பல - உலகின்

இயக்கத்திற்காய் ஒளிபவையும் பல

காலையின் விடியல் கதிரவன் ஒளியால் - பலர்

கனவுகளின் விடியல் அவரவர்  -முகத்தினில்

உதித்திடும் சிறு புன்னகை ஒளியில்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எங்கேயும் எப்போதும்......

 கரைபுரண்டு ஓடியே கடல் நீரும் வற்றலாம்

காலைச் சூரியன் ஓர்நாள் திசைமாறி உதித்தாலும்

எம்மை உள்ளத்தால் சுமந்திட்ட உம் உயிரன்பினை -இனி

எங்கே நாம் தேடிட? எதை சொல்லி அறிட?

எமக்கு ஏன் இந்த  வேதனை? -இதனால் யாருக்கு 

என்ன சாதனை? உம் அன்பிற்கிணை  

எதுமில்லை எங்கேயும் எப்போதும்..








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிறு பறவை சொல்வதென்ன....






அசைந் ஆடும் காற்றிலே

அவதியுரும் ஒரு சிறு  கிளையில்

அமர்ந்திருந்த அச் சிறுகிளியின்

அயாராதா தேடல் எதுவாக இருக்கும்?

கிளையின் உதிர்கின்ற இலையில்

அம்ர்ந்திட்ட பொழுதும் பயமேதுமில்லை - ஏனெனில்

கிளையை மட்டும் நம்பி அமரவில்லை  அது தன்

இறகை நம்பியே அமர்ந்தேன் என்பதை

இயல்பாக உணர்த்துகிறது இவ்வுலகுக்கு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகு நிலா...

 




வானுக்கு நீ அழகா ? அல்ல

வானத்தில் நீ அழகா?

வளர்பிறையில் முழுமதியாய்

வளர்ந்து நீ வருகையிலே

வையகத்து உயிர்களேல்லாம்

மெய்மறந்து இரசிக்குதம்மா.......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

 கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்

காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்

கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை

நதியில் கரைத்துவிட்டு

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலனவன் அரவணைத்ததேனோ.......

 எல்லையற்ற இவ்வுலகில்

அல்லலுற்று தொல்லையுறும் எத்தனையோ

உயிர்களுக்கு மத்தியிலே -அன்பால்

அரணமைத்து ஆட்சி செய்த உங்கள் வாழ்வை

காலனவன் அரவணைத்ததேனோ.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வண்ணமாய் வடிக்க முன்னே.....

 சொல்லில் அடக்கிடுமா? அல்ல

சோகத்தை மறைத்திடுமா?

என்னென்ன கனவு கண்டோம் -நாம் 

எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்

கண்முடி தூங்கச்  சென்றதேனோ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாதியிலே....

 சிகரங்கள் பல நாம் காண -தன்

சிந்தனையை செயலாக்கி

உதிரத்தை உரமாக்கி உழைத்திட்ட உறவு -இன்று

உமையாகி உறக்குவதேன்?

மிதிவழி தெரியாது பாதியிலே தவிர்க்கின்றோம்




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விடை.....


விடை கான முடியதா பல கேள்விகள்
இடைவிடாது இன்னும் தொடரத்தான் செய்கின்றது -காரணம்
விழிகள் விடியல் கானும் வரை சாத்தியமில்லை -நாம் 
விடை காண்பதும் நாம் தேடல்கள் ஓய்வதும்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நல்லொளி....




 வைகறை எழுந்து வாசல் தெளித்து - தம் 

உள்ளத்து எண்ணங்களை -கை

கிண்ணத்து மாவல் வண்ணமக்கும்

அணைத்துயிரும் ஆதவனே - உன்னுடத்தில்

ஏதோன்றை எதிர்பார்த்தே நிக்கின்றது!...

தை பிறந்த வழி பிறக்கும் என்பது ஒருகால நம்பிக்கை

நம்பிககை கொண்டு  உன் கைபிடித்தவர்[கள்]

வாழ்க்கையிலாவது உன் ஒளிக்காரங்கள்

நல்வழி [ஒளி] காட்டுவதெப்போது?........



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உறவு......









உறவென்பது வெறும் சொல்லல்லா
உதிரத்தில் கலந்து உள்ளத்தை அளும்
உயிரின் ஒருபாதி  - அதில்
ஊடல் என்பதும் விரிசல் என்பதும் - பெரும்
உயிர்கொல்லி நோய்யாகும்
உடலில் நோயின்றி வாழ்வதும்
உறவில் பிரிவின்றி இருப்பதும்
உலகத்தில் இன்னும் கிடைக்கா - அதி
உன்னத விருந்தாகும் - இதை
உனர்ந்தவர் யாரும் இன்னும்
உதிக்கவுமில்லை உதிப்பதுமில்லை
உலகைப் படைப்பவன் நியாதி இதுவேனில்
உறவுகள் நிலையும் இதுவே!..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கனவுகள் காயவில்லை இன்னும்.........










கடல் நீரில் மீன் விடும் கண்ணீர்
பிரித்தரிந்தார் யாருமில்லை -அதுபோல
எண்ணக் கனவுகளை வண்ணமாக்க
காலத்தோடு போட்டியிட்டு வாழ்வோர்
கனவுகள் என்றும் காய்வதில்லை........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS