பந்தமிது பல்லாண்டு நிலைக்கவென
சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து நிற்க
ஆன்றோர்கள் ஓடு ஆண்டவனும் ஆசிகள் கூற
இணைத்து வைத்த இரு கைகளில் ஒன்றை இன்று
இடையில் இறைவன் பற்றிக் கொண்டதேனோ
நெஞ்சத்தில் வாழும் அன்பை -எந்த
வஞ்சத்தாலும் ஏன் பிரபஞ்சத்தாலும் பிரிக்கேலாது
குடியுரிமை வேண்டுமானால் கொடுக்கலாம் சொர்க்கம் - ஆனால்
அவன் ஆத்மா குடியிருப்பதோ நாம் இதயம்....


0 comments:
Post a Comment