RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

உள்ளம் கொள்ளை போகுதே...



எண்ணற்ற கனவுகளை தினம் தினம்

எண்ணமற் சுமக்கும் நாம் மனம்கூட

எங்கேயோ ஓர் இடத்தில் வண்ணமாயமானா

எண்ணங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது,

கண்ணில் படும் சில வண்ணங்கள்  

கண்களுக்கு மட்டும் விருந்தல்ல சிலசமயம்

உணர்வுகளுக்குள் குடிபுகுந்து -நாம் 

உள்ளத்தையே கொள்ளை கொள்ளும்

உன்னத அற்றல் இயற்க்கையண்னையை தவிர

உலகில் வேறெதற்குண்டம்மா....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விழி பேசும் கவிதை......



மொழிகள் ஆயிரம் இருந்தும் அவள்

விழிபேசும் வார்த்தைகளுக்கு ஈடாகுமா

எழுத்துக்கள் சேர்த்து  வார்த்தைகளைக் கோர்த்து

வரிவடிவம் கொடுக்காமல் அவள் விழியசைவில்

வெளிவரும் சைகைகளின் அர்த்தங்களுக்கு

எம்மொழியிலுள்ள அகாரதியில் தேடினும்

அதன் அர்த்தத்தை அவனின்றி யார் அறிவார்

அறிஞர்கள் பலர் கூடி எவ்வளவுதான்

அராய்ச்சி செய்தாலும் அறிய முடியா

அதிசயம் அவள் விழி பேசும் வார்த்தைகள்

மொழியை மறந்து மெய்யாய் கலந்து

விழியால் கவிபேசும் இதயங்கள் பல......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கனவுகள் மெய்ப்படும் ....

 


உன் நினைவுகளோடே விடிகிறது

ஒவ்வொரு விடியலுமே

நாம் நினைவுகளை நியமாக்க முயற்ச்சிக்கிறேன்  - என்

ஒவ்வொரு முயற்ச்சியிலுமே

மலரும் பூவெல்லாம் ஒரு நாள் வடித்தான் ஆகனும்

என்பது விதியானாலும் -காயாகி கனியாகி

மரதிலிருந்து விழும் கனிகள்

மண்ணோடு போராடி மீண்டும் விருட்சமாவதுபோல்

நாம் நினைவுகள் நிஜமாகி 

கனவுகள் மெய்ப்படும் காலத்திற்க்காய் காத்திருக்கிறேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விதி போடும் பயணத்தில்....



 விதி போடும் பயணத்தில்

வழியறிய பயணிகள் நாம்

காலத்தின் பாதையில் நகரும்-  நாம்

நாட்களின் எண்ணிக்கை நாம் அறியோம்,

பயணங்கள் பலவிதம் அதற்கேற்ப

பாதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்,

நாம் பயணங்கள் ஒரு நாள் முடியலாம் -ஆனால்

பாதைகள் என்றும் முடிவதில்லை,

விதிவரைந்த பாதையிலே 

வலிகளோடு தொடருது பல பயணங்கள் இங்கே......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணாமூச்சி ஆட்டம் .....



விழி வழியே வந்த காதல்

பாதி வழியினிலே போகுமென்றோ

பாசம் தந்து கொல்லுமென்றோ

பழகும் போது புரிந்ததில்லை

மண்டபமே மகிழ்ச்சியிலே

மந்திரங்கள் ஒலிக்கையிலே

மணமகனின் அருகினிலே

மங்கை இவள் தவிப்பதனை

மாற்றிட தான் மார்க்கம் உண்டோ

கனவுகளின் கைகளிலே மனதை கொடுத்துவிட்டு

காலத்தின் பாதையிலே தொடர்கின்றாள்-வாழ்வினையே

கண்ணாமூச்சி ஆட்டமாய்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வார்த்தையில்லா மொழி.

 


அறியாத ஓர் சுகம்

அளவில்லா ஆனந்தம்

அன்பாலே புடைசூழ - உணர்கின்றேன்

அகிலமிதில் தினம் தினம் புதுவசந்தம்...

எவரிடத்தும் கண்டதில்லை 

இம் மொழியை இதுவரையில் 

வார்த்தைகளே இல்லமல் 

வகை வகையாய் கதைபேசும் - உன்

விழிமொழியை நானின்றி யாரறிவார்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்பிக்கை நம்கையில்...



 இறகுகள் இருந்தால்

இமயத்தை தொடுவேன் என்பது எதிர்பார்ப்பு- என்

இருகைகள் போதும் இருப்பதைக் கொண்டு

இமயத்தின் உச்சியை அடைவேன் என்பது நம்பிக்கை

எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை - அதை

எதிர்கொள்ளும் விதத்தில் இருக்கிறது வெற்றி

நமக்குள்ளே பிறந்து நாம் கைபிடித்து

நம்மையே வழிநடத்துவது நம்பிக்கை.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அனல் அலை...

 



தங்க முடியவில்லை ஐயா

தவிக்கின்றோம் உன் வெப்பத்தால்

அறிவியல் என்னதான் அலைவீசி வளர்ந்தாலும் -உன்

அனல் வீசும் வெப்ப அலைக்கு

அவை எல்லாம் ஒரு தூசு

பொழுது சாயும் நேரம் கூட -உன்

கோபத்தின் வேகம் குறையாதாது ஏனோ?

அலையில் அகப்பட்ட துரும்பு போல -உன்

அனல் அலையால் துடிக்கின்றோம் இங்கு.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS