மொழிகள் ஆயிரம் இருந்தும் அவள்
விழிபேசும் வார்த்தைகளுக்கு ஈடாகுமா
எழுத்துக்கள் சேர்த்து வார்த்தைகளைக் கோர்த்து
வரிவடிவம் கொடுக்காமல் அவள் விழியசைவில்
வெளிவரும் சைகைகளின் அர்த்தங்களுக்கு
எம்மொழியிலுள்ள அகாரதியில் தேடினும்
அதன் அர்த்தத்தை அவனின்றி யார் அறிவார்
அறிஞர்கள் பலர் கூடி எவ்வளவுதான்
அராய்ச்சி செய்தாலும் அறிய முடியா
அதிசயம் அவள் விழி பேசும் வார்த்தைகள்
மொழியை மறந்து மெய்யாய் கலந்து
விழியால் கவிபேசும் இதயங்கள் பல......


0 comments:
Post a Comment