மண்தோன்றி கல்தோன்ற காலத்துக்கு முன்தோன்றிய
மூத்தகுடியாம் நம்குடி தோற்றம் மட்டுமல்ல
மனிதகுலத்துக்கே உரிய நல் மாண்பினையும்
மார்போடு அணைத்து வள்ர்த்தவர் நம்முன்னோர்
அறத்தையும் அறிவையும் அன்போடு வளர்த்தவர்கள்
அஞ்சாமை கொண்டு அநீதியை அழித்தவர்கள்
உயிரிலும் மேலாக மானத்தை மதித்தவார்கள்
வாழ்ந்த உலகில் மனிதத்தை தேடுகிறோம்
உறவுகளோடு உணர்வுகளையும் தொலைத்து விட்டு
உயிர்களை பணத்திற்காய் பரிமாற்றும் உலகில்
உடலோடு உலாவரும் தலையாட்டி உருவங்களாய்
உருவடித்த உலகில் நாம் உமைகளாய்
இருப்பதானல் மாற்றம் ஏதும் நிகழ்ந்திடாது
மனிதனை தேடும் உலகில் ஒற்றுமையாய்
முயற்சி செய்து மனிதனாய் மாற்றம் காண்போம்