வசந்தகாலப் பறவையாய் வான் உயரப் பறக்கையிலே
பாசம் என்னும் சிறகடித்து போகும் வழியெல்லாம்
பக்கத் துணையாய் இருந்து என்னைப்
பக்குவமாய் பாதுகாக்கும் பண்பனைத்தும் அவனிடத்தே
பார்த்த மறுகணமே அகிலமதில் ஆண்களுக்கெல்லாம்
அணிமுத்தாய் அவனையே அடையாளம் காட்டி
ஆயுள்வரை உறவாக்கிஅகமகிழ்ந்து வாழ்ந்திடவே
இதயத்தில் இடமொதுக்கி இரவுபகல் அவன் நினைப்பில்
இணைவதற்காய் காத்திருப்பதற்க்கு காரணமேயில்லை
ஏனேனில் அகராதியிலேயே இல்லதாவன் அவன்


0 comments:
Post a Comment