காலம் களவாடிய இளமை
காலம் களவாடிய இளமை நினைவுகள் ....
காலம் களவாடிய இளமை
சொல்லாத காதல் ....
என்ன வென்று புரியமால் - என்
எண்ணமெல்லாம் அலைமோத
மெல்லெ மெல்ல என் இதயத்தை
அபாகரித்து ஆட்சி செய்யும் -என்
இதயத சிம்மாசனத்தில் அமர்த்தவளை (னை)
சொற்க்களைக் கோர்த்து உருவான
காதல் என்னும் வார்த்தை
களைத்திடுமோ என்ற பயத்தினால்
கம்பிகளுக்குள் அடைபட்ட கைதியாகவே
சொல்லாத காதலுடன் சேர்ந்தே நான் வாழ்கிறேன் இன்றும்
பாரா முகத்தில் பதிந்த காதல்....
என்னிக்கூடப் பார்த்ததில்லை என்
எண்ணங்களை கொள்ளை கொள்ளும் அவள்
எழுத்துக்கள் என்று ஏனோ விளையாட்டாய்
கருத்துக்களை பகிர்ந்தேன் அவள் எழுத்துக்களுக்கு
காலம் கடக்கையில் காத்துக் கிடக்கிறேன்
கணம் ஒவ்வொன்றும் கருத்தோடு கதைபகிர
பாரா அவள்முகம் என் அகத்தினுள்
அரணமைத்து ஆட்சிசெய்ய அமைச்சரானேன்
அவள் சொல்லுக்காகக் காதல் ராச்சியத்தில்
காத்திருக்கிறேன் பாரா முகத்தின் பதிவுக்காய்..
நான் இல்லாத டைரி.....
துள்ளிக் குதித்து மகிழ்ந்த நினைவுகள்
தூக்கம் மறந்து துடித்த பொழுதுகள்
சொல்ல நினைத்து சேர்த்து வைத்தவை
சொற்கள் சேர்த்து வார்த்தை கோர்த்தமை
நட்புக்கே தெரியமல் மறைத்த ரகசியங்கள்
நாட்குறிப்போடு மட்டுமே நகர்ந்த காதல்
ஆசையாய் நெருக்கி அடையமுடியாமல் போனவையுடன்
அடக்கிய அழுகையின் சில துளிகள்
அத்தனையும் ஆவணமாய் போனதே இன்று
நான் இல்லாத டைரியை வாசிப்போர்க்கு....
கவி சிவா




