வாழ்வின் விதியா? காலத்தின் சதியா?
வாழ்க்கையின் நியாதியா? எம் நிலைதான் என்ன?
எண்ணங்கள் பலவும் எழுவதில் தவறில்லை
அதை ஏற்று நடப்பது அவரவர் கைகளிலே
ஏக்கங்களுக்குள்ளே சிக்கித் தவித்து
எல்லைகளை உருவாக்கி திறனை முடக்காதே
சிற்சில மாற்றம் சிலநேரம் தயக்கம் ஆனாலும்
ஓயாது உழைக்குது முயற்சி உள்ளுக்குள்
நற்செயலுடன் இணைந்தே சிந்தையும் பயணிக்க
வரட்சியில் மலர்ச்சி பெறும் மரம்போல
புரட்சியை முயற்சியால் செய்வோம் இன்றே


0 comments:
Post a Comment