வாழ்க்கை எனும் பயணம் முடிந்த
பின்னும் பாதைகள் முடிவதில்லை
வானவில் கோலத்திலும் வர்ணஜாலங்கள் மறையலாம்
வர்ணங்கள் முடிவதில்லை
எண்ணங்களைச் சேர்த்து மனிதன் போட்டது
வாழ்க்கை எனும் கோலம்
ஒளிரும் வர்ணங்கள் சேர்த்து வானில்
இயற்கை போட்டது வர்ணஜாலமாய் வான்வில்
மனிதன் மனதில் போடும் எண்ணங்களும்
இயற்க்கை சேர்க்கும் வானவில் வண்ணங்களும்
மனதின் அந்நேர மகிழ்ச்சிக்கு விருந்து
நிரந்தரமற்ற தன்மையை உணர்த்த
நிகரான வடிவம் வழ்க்கையும் வானவில்லும்...


0 comments:
Post a Comment