எம் இனத்தின் இதயங்களிலிருந்தும்
அங்கங்களைப் பிளந்தும் ஓடிய குருதியால்
நந்திக்கடலும் நாம் நிலமும் செம்நதிக்கடலாய்
காட்சியளித்த கொடூர நாள் இது
சண்டைகள் ஓய்ந்து கண்டங்கள் தாண்டி - பல
ஆண்டுகள் கடந்து ஆட்சிகள் மறலாம் -ஆனால்
முண்டங்களாக எம் இனத்தின்
அங்கங்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த
ஆவல காட்சியை எம்மவர் நெஞ்சங்களால்
மறக்க முடியுமா? அல்ல மறக்கதான் நினைக்குமா?
நாம் கடந்து வந்த நினைவுகள் கொடூரமானவை
நாமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கலாம் -ஆனால்
விதைக்கப்பட்ட ஒவ்வாரு உடலும்
விறு கொண்டு எழும் விருட்சங்களுக்கான அடித்தளம்....


0 comments:
Post a Comment