பஞ்சு மனத்தோடு
கொஞ்சிடும் தாய்ப் பாசத்தை
வஞ்சகமாகவே பாதியில்
ஏன் பரித்தாய்....
நெஞ்சில் தலை சாய்த்து-அன்பு
தஞ்சமே தானாகி
பஞ்சமே அறியமால் பார்த்திட்ட
தந்தையின் உயிரையும்
தட்டியே ஏன் பரித்தாய்...
கோடி சொந்தம் கூடியே இருந்தாலும்
கொட்டியே கொடுத்தாலும் பாசத்தை
ஓடியே போய்விடுமா?
உள்ளத்து வேதனை.....
உதிரத்தில் உருவான
உரிமைதனை நீ பறிக்க
உடன் பிறப்பய் வந்த-அவன்
உறவுகளை தான் பிரிந்தான்
வாழ்வின் உயர்வுக்காய்...
வாழ்க்கை என்பதே
ஆகுதீ ஆனாதால்
தினம் வெந்து வெந்து
நெந்த உள்ளம்
சோதனைகள் பல தாண்டி
அணையா அகல் விளக்காய்
வாழ்வை ஆக்குதற்காய்
அயராது உழைக்கின்றான்
பேனா முனை தாங்கி
பொழுது பகல் பாரமால்...
வெளியுலகை பார்ப்பதற்காய்
தாய் கருவறையில்
அமர்ந்திட்டான் அன்று
வெளியுலகம் திரும்பி
தாய் நாட்டை பார்த்ததனால்
காவல்துரையறையில்
அமர்ந்திட்டான் இன்று...
விதி வரைந்த பாதையிலும்
சதி விரித்த வலையிலிலும்
பாதிப்புக்கள் பல தாண்டி
சாதிக்க முனைபவனை-இனியும்
சோதிக்காது விட்டுவிடு
வாதிக்க வரவில்லை-மனம்
வருந்தியே கேட்கின்றேன்
ஜோதியாய் ஒளிக்கட்டும்-விடியும்
தேதிகள் ஒவ்வொன்றும்
அவன் வாழ்வில்.......
9 comments:
super rathy
""தாய் நாட்டை பார்த்ததனால்
காவல்துரையறையில்
அமர்ந்திட்டான் இன்று.."
பலரர் நிலையிது
அருமையான கவிதை...தொடருங்கள்்.
"விதி வரைந்த பாதையிலும்
சதிவரித்த வலையிலிலும்.."
எளிமையான சொற்களைக் கொண்டு
வலிமையாகச் சொல்லிப்போகும் லாவகம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
உங்களைத் தொடர்வதில் மகிழ்வு கொள்கிறேண்
தாய் நாடு திருப்புவர்களுக்கு இந்த அவலம் என்றால் அவர்கள் எங்குதான் செல்வது..
நல்ல ஜீவனுள்ள கவிதை..
வாழ்த்துக்கள்..
தோழியே..
தொடர்ந்து வாருங்கள்..
திரட்டிகளில் இணைப்பு கொடுங்கள் அதிக மக்கள் வாசிக்க வழி கிடைக்கும்..
Ratnam said..
நன்றி அண்ணா...
தோழி பிரஷா said...
ஆம்,கனத்த இதயத்துடன்
கவிவடிக்க மட்டுமே முடிகிறது.
Ramani said...
உங்கள் வருகையை
உவகையுடன் வரவேற்றே
உளமற நன்றி கூறுகிறேன்...
# கவிதை வீதி # சௌந்தர் said...
உங்கள் வருகையினை வரவேற்று
உயர்வுக்கு வழிகாட்டிய
உங்கள் வாழ்த்துக்களுக்கு
உளமற நன்றி கூறுகின்றோம்..
Post a Comment