பொங்கிவரும் அன்போடு
போட்டியிட்டே பாசம்
எனைநாடி வந்தபோதும்
நகர்கின்ற நாட்களோடு
போட்டியிட முடியாது
ஏக்கம் மட்டுமே
எதிர்பார்புடன் கூடி
மீண்டும் எஞ்சியே நிற்கின்றது
என்னிடத்தில்...
எத்தனை காலத்து
கனவுடன் கூடியே
உம் வரவுக்காய்
எண்ணிக்கையற்ற
எண்ணங்கள் எல்லாம்
எல்லையாய் சுற்றி நிற்கின்றது
என்னிடத்தில்.....
தொட்டிலில் போட அன்று
கிட்டாத சொந்தம்
எட்டத்து நாட்டில்-இன்று
வந்து எட்டி அணைத்ததனால்
அடைந்திட்ட ஆனந்தத்தை
அளவிட வார்த்தையில்லை
என்னிடத்தில்...
உம்மிடத்தில் பகிரப்படாத
பாசத்தின் பக்கங்களும்
பழகிப் பதிந்திட்ட
பசுமையான நினைவுகளும்
உறவுகளின் உதயத்திற்காய்
காத்திருக்கும் என்றும்
என்னிடத்தில்.....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment