கருவினில் உன்னை
கனவுகளுடனே சுமந்து
கட்டிளம் பருவம்வரை
கண்ணை இமைபோல
உனை காத்தவள் இங்கே
கண்மணி இழந்து துடிக்கிறாள்
கடும் போரின் போதும்
கண்பார்வை துறந்தும்
கஷ்டங்கள் பல கடந்தும்
கடல் தாண்டி அன்று - உனை
காலனிடம் மீட்டனரே
துன்பங்கள் மறந்து
துறைபோக கற்று
துளிர்விட்ட உன்வாழ்வு
பல்கலையில் துலங்க முன்னே
தூதன் அவன் உன்னை
துணைக்கு அழைப்பதற்காகவா?
தூது விட்டன் தூசிபோல்
சிறு நோய்தனையே..
மருத்துவம் பெற்று
மாட்சிமை பெற்று
மறுநாள் வருவாய் என
எதிர்பார்த்து இருந்த
இதயங்களில் பேரிடியாய்
இடிந்தது உன் மரண செய்தி
இன்னும் எண்ணுகிறோம் - இது
இரவு நேர கெட்ட
கனவு என்றே எண்ணி
கண் விழித்துப் பார்க்கையிலே
காணவில்லை உன்னை இங்கு
உன் நிழற்படத்து முன்னே
பெருகிடும் கண்ணீருக்குள்
நீந்துகின்ற உன் நினைவுகளுடன்
நிம்மதி வேண்டியே பிரார்த்திக்கிறோம்
உம் ஆத்மா சாந்திக்காய்......
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment