RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

புன்னகை...

காலைஞ் சூரியன் தன்
கதிர்களை பரப்பி
உதிர்த்திடும் புன்னகை
உலகுக்கு வெளிச்சம்...

கடலலை கூட
சலசல எனவே
பூங்காற்றுடன் கலந்து
புன்னகை சிந்துதே...

பூவினம் தம்
மொட்டினை அவிழ்த்தும்..
புல்லினம் தன்
சிறகினை விரிந்தும்-தினம்
சிந்துதே புன்னகை...

ஊர்வன தம்
உறவினை பகிர்ந்தும்
விலங்கினம் தம்
ஒலிகளின் அசைவிலும்
உதிக்குது புன்னகை...

புன்னகையில் கூட
புதுபுது அர்த்தம்
அன்பின் தன்மைக்கேற்ப
அதன்வகை மாறுமாம்...

புதிய உலகிலும்
புரியா மொழியிலும்
புரட்சியைக் கொடுத்தே
புதுத்தடம் பதிந்திடும் புன்னகை...

தினம் துன்பங்கள் தொலைந்தே
எங்கும் புன்னகை பூப்பதால்
இன்னும் இப்பூமி சுத்துது - அதன்
இன்பத்தின் இசைவிலே.....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

மங்களம் பொங்கவே....

புன்னகை சிந்தியே
பூமிக்கு வந்திட்ட
புத்தம் புது மலரே...

உன் எண்ணங்கள் எல்லாம்
பல வண்ணங்களாக
வாழ்வை அலங்கரிக்க...

உலகுக்கு ஓளிகொடுத்தே-தினம்
ஓயாமல் உழைத்திடும்
வானத்துச் சூரியன் போல்
வையத்தில் உன் வாழ்வு
என்னாளும் ஓளிவீச....

மலரும் பொழுதுகளோடு
தவழ்ந்து வரும் தென்றலிலும்
உன் மகிழ்வே கலந்தொலிக்க...

மங்களம் பொங்கவே
மங்கை தனை கரம்பிடிக்கும்
மணவாழ்வும் கிட்டிடவே
பெற்றவர் ஆசியுடன்-எம்
பெருமான் துணைநாடி
பிறந்த இந் நாளில்
நானும் வாழ்த்துகிறேன்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உன்னாத வார்த்தை...

ஆண்டவன் படைப்பிலே
அதி உன்னத பரிசு
உள்ளத்து உணர்வினை
உயிர் ஒவியமாய்
உதட்டினால் வடித்திட
உதவிடும் பொக்கிசம்...

அகத்திலே ஊற்றேடுக்கும்
அன்பான வார்த்தையால்
அனைத்தையும் இயக்கியே
அகிலத்தை அழலாம்...

அகந்தைக்கு அகப்பட்டு
அள்ளி வீசிடும்
அநியாய வார்த்தைகளால்
அழிந்திடும் சம்ராச்சியம்...

எல்லைகள் வகுத்து
தொல்லைகள் இன்றி
சொல்லைப் பறிமாறின்
இல்லை அதற்க்கு நிகர் எதுவும்...

என்ன விலை கொடுத்தும்
விட்டுட்ட வார்த்தையை
மீட்டு இட முடியுமா
வலிபட்ட நெஞ்சத்திலிருந்து...

அரும்பெரும் சொத்தாய்
அகிலத்தில் பெற்ற
அற்புத பரிசை
அளவாய் பகிர்ந்து
அழகாய் வாழ்வோம்...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உன் சின்னப்பாதங்கள்...

இன்பமயமான இனிய-எம்
இல்லமெனும் நந்தவனமதில்
இளம் தென்றலாய்
வந்துதித்த செல்வமகள் நீ...

புது வாசம் வீசியே
வந்த உன்வரவால்
உள்ளம் மகிழ்ந்தே-உறவில்
உயர் பதவிகள் பெருகுதம்மா...

சந்ததி பல பாடி
சரித்திரம் படைத்தே
சந்தோச ஊஞ்சலில்-நம்
சந்ததி தளைத்திட -உன்
சின்னப் பாதங்களை
வாழ்க்கை எனும்
வண்ணங் கோலமதில்
வளம் பெறப் பதித்திட-இறை
வரம் வேண்டி வாழ்த்துகிறேன்....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நட்பெனும் அரங்கத்தில்....

நட்பெனும் மேடையில்
நடக்குது நாடகம்-இங்கு
நவ நாகரிகத்துடன்
நவரசங்களும் கலந்தே....

இணைவதற்கு என்றே
இடைவிடாது அழைப்பெடுத்து
இதயத்தில் இடம் பிடித்த
இனிய உறவாம் ஓர் நட்பு...

சொந்ததில் வந்திட்ட
பந்தத்தில் பாதி பகிர்ந்தே
அன்பெனும் அர்த்தத்தை சேர்த்து
அரன் அமைத்திட்ட
அழகான நட்பு ஓன்று...

முகமது பராமல்
முகவரி அறியமால்
நல் நம்பிக்கை முன்வைத்தே
நகர்ந்திடும் நட்புக்கள்...

பார்த்திட்ட போதே
பழகிடத் துடித்து
கள்ளத்தை மறந்து
உள்ளத்தை பகிர்ந்திட்ட
உன்னத நட்புக்கள் பல...

நன்மையோ தீமையோ
நமக்கென என்னாது
நடிப்பினை மறந்து
நட்புக்காய் தனைமாற்றி
நாளும் உழைத்திடும்
நட்பெனும் அரங்கத்தில்
நானும் ஓர் அங்கமே....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

காதல் வலி...

காலத்தின் சதியா இல்லை
காதலர் தம் விதியா
கனவுகள் பல சுமந்தே
கண்டங்கள் பல
தாண்டி வந்தவர்கள்
கடந்த காலம் அதை எண்ணி
கண்ணீரில் கரைகின்றனர் இங்கு

வருங்கால வாழ்க்கை அதை
வளம்படுத்தவென
மேற்குலக நாட்டுக்கு வந்தவர்
வதிவிட உரிமைக்காய்
வழியில் வந்தோரை
வாழ்க்கை துணையாக்கின்றார்

அன்பு வைத்த உள்ளங்களை
யாரும் அறியாமலே
குடியுரிமை பறிபோகாமல் இருப்பதற்காய்
தள்ளியே வைத்தவர்கள் - தினம்
சொல்லி அழுகிறார்
கண்ணாடி முன்னிலையில் மட்டும்
தம் நிலைதனை

கடல் தாண்டி வந்ததினால்
காதல்தனை தாண்ட முடியாமல்
மன முழுக்க ஒருத்தியையும்
மனைவியென இன்னொருத்தி
கைப் பிடித்தே
காலத்தின் பாதையிலே
காயங்கள் பல சுமந்தே செல்கின்றார்...

உறவுகளை தனை நினைத்தே
உண்மைதனை மறைந்தே
உதட்டினை ஊமையாக்கியவர்
உதிர கண்ணீர் வடிக்கிறார் - தம்
இதயத்தில் இருந்து

கல்லறை செல்லும்வரை
இல்லையெனினும்
கரைந்த சாம்பலிலாவது - இந்த
இணைந்த இதயங்கள்
கலங்கும் எணும் எதிர்பார்ப்பில்...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பெண்ணின் பெருமை....

எதற்கு இன்னும் போராட்டம்
எங்கே இல்லை உன் நாட்டாம்
அனைத்திலுமே அதிகாரம்
அந்தஸ்திலும் முதல் ஸ்தானம் - அதற்கு
அரசு கூட அங்கீகாரம்
வழங்கி ரொம்ப நாளாச்சு

குழந்தை என்னும் ஸ்தானத்திலே
குடியிருந்தே தெய்வந்தோடு
மங்கைராய் இருந்த நீர்
வேங்கை என வெகுண்டெழுந்தே
வேரறுத்தீர் வேதனை அத்தனையும்

நல்லறத்தை வளர்ப்பதற்காய்
இல்லறத்தில் இணைந்தே
நார்த்தனார் நடப்பறிந்தே
நட்புடனே பகிர்ந்தீரே
மருமகளாய் உமை மறந்து
மகளெனவே அழைத்திடவே
மனைவியே என நாமேற்று
மனையையே ஆட்சி செய்தீரே

இல்லத்தில் மட்டுமல்ல - அனைவர்
உள்ளத்திலும் யாரும்
அறியாமலே இடம் பிடிந்து
அன்பாலே அங்கீகாரம் - அதை
உனதாக்கி - உயர்வுக்காய்
உண்மையாய் உழைப்பதினால்
உலகத்திலே உனக்கோர்
தனியுரிமை அளித்தே
கொண்டாடி மகிழ்வதே
உலக மகளிர் தினமிதனை...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அவள் சுவடுகள்.....

அகிலமதில் அவள்பெருமை
அறியார் யார் உளரோ
ஆண்டவன் தொடங்கி
ஆண்டிவரையும் அவள்
அன்பினிலே எங்கும்...

பத்து திங்கள் பெரும்
பாடுபட்டே பக்குவமாய்
பாரினிலே பாதம் பதிக்க
வைத்த பாசத் தாயுமவளே...

துள்ளிலே திரியும்
பள்ளி பருவத்தே அன்பாய்
அள்ளியே அறிவை
சொல்லியே கொடுத்திடும்
ஆசனாய் அவளே...

நாடியே சென்றவளுடன்
ஜோடி சேர்ந்தே வாழ்வதற்காய்
தேடியே வேலை தினம்
வாடியே போகும்
வாலிபர் நிலைக்கும் காரணம்
வஞ்சி அவளே...

வாழ்வின் உயர்ச்சிக்காய்
முயற்ச்சி செய்து கணவன்
உழைத்த ஊதியத்தை
கச்சிதமாய் செலவு செய்தே
கடமைகளை நிறைவு
ஏற்றுபவளும் அவளே...

தள்ளதா வயதினிலும்
கைத்தடி கூடவே வந்து
கைவைத்தியம் பார்த்தே
தலைமுறை தளைத்திட
தளராமல் உழைப்பவளும் அவளே...

அன்பின் அரவணைப்பில்
அன்னையுமாய்
உறவைப் பகிர்தலிலே
உடன் பிறப்பாய்
பள்ளியிலே தோழியாய்
பருவவயதினிலே காதலியாய்
நோய்யுற்ற வேளையிலே தாதியுமாய்
மனம் கல்ங்கி நிற்கையிலே மந்திரியாய்
களத்தினிலே வீராங்கனையுமாய்
ஆழ்கடல் முதல் ஆகாயம் வரை
அணைத்திலும் அவள் சுவடுகள்
அகிலமெங்கும் பதிகின்றது...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இணைந்த நட்பு....

சின்ன சின்ன சொற்கள் சேர்த்து
எண்ணுக் கணக்கேயில்லாமல்
எத்தனையோ நாளிகைகள்
செலவு பண்ணி
வண்ணமயமாக வடித்திட்ட-நம்
நட்பெனும் சின்னமதை
சில நொடியில்சிதைத்திடத்தான்
முடிந்திடுமா?

உள்ளத்தில் உரைந்திட்ட
உண்மையன்பை மறைத்திட்டு
உதட்டுவழி உரைத்திட்ட
உறுதியற்ற வார்த்தைகளால்
உடைந்திடுமா நம் அன்பு?

கடந்து வந்த பாதையிலே
பழகி வந்த பல பாசங்களை
பரிகொடுத்து பறிதவிர்ககும்
உன் உள்ளத்தில் இன்னோர்
 துன்பத்தின் பதிவைப்
 பகட்டாய் கூட பார்ப்பதற்க்கு
பலமில்லை என்னிடத்தில்

எதிர்பார்பு எதுவுமின்றி
எம்மிடையே மலர்ந்த நட்பில்
ஏக்கங்களோ மனத்தாக்கங்களோ
இனியும் இல்லாமல்-இவ்
பிறப்பில்  மட்டுமல்ல
இனி மலரும் ஜென்மங்கள்
அத்தனையிலும் இணைந்திருப்போமே...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS