RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

மங்களம் பொங்கவே....

புன்னகை சிந்தியே
பூமிக்கு வந்திட்ட
புத்தம் புது மலரே...

உன் எண்ணங்கள் எல்லாம்
பல வண்ணங்களாக
வாழ்வை அலங்கரிக்க...

உலகுக்கு ஓளிகொடுத்தே-தினம்
ஓயாமல் உழைத்திடும்
வானத்துச் சூரியன் போல்
வையத்தில் உன் வாழ்வு
என்னாளும் ஓளிவீச....

மலரும் பொழுதுகளோடு
தவழ்ந்து வரும் தென்றலிலும்
உன் மகிழ்வே கலந்தொலிக்க...

மங்களம் பொங்கவே
மங்கை தனை கரம்பிடிக்கும்
மணவாழ்வும் கிட்டிடவே
பெற்றவர் ஆசியுடன்-எம்
பெருமான் துணைநாடி
பிறந்த இந் நாளில்
நானும் வாழ்த்துகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

புத்தம் புது மலரே...

உன் எண்ணங்கள் எல்லாம்
பல வண்ணங்களாக
வாழ்வை அலங்கரிக்க...//
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்.

Learn said...

இனிய வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய கவிதை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..

Post a Comment