ஆண்டவன் படைப்பிலே
அதி உன்னத பரிசு
உள்ளத்து உணர்வினை
உயிர் ஒவியமாய்
உதட்டினால் வடித்திட
உதவிடும் பொக்கிசம்...
அகத்திலே ஊற்றேடுக்கும்
அன்பான வார்த்தையால்
அனைத்தையும் இயக்கியே
அகிலத்தை அழலாம்...
அகந்தைக்கு அகப்பட்டு
அள்ளி வீசிடும்
அநியாய வார்த்தைகளால்
அழிந்திடும் சம்ராச்சியம்...
எல்லைகள் வகுத்து
தொல்லைகள் இன்றி
சொல்லைப் பறிமாறின்
இல்லை அதற்க்கு நிகர் எதுவும்...
என்ன விலை கொடுத்தும்
விட்டுட்ட வார்த்தையை
மீட்டு இட முடியுமா
வலிபட்ட நெஞ்சத்திலிருந்து...
அரும்பெரும் சொத்தாய்
அகிலத்தில் பெற்ற
அற்புத பரிசை
அளவாய் பகிர்ந்து
அழகாய் வாழ்வோம்...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல கருத்து நல்ல படைப்பு
எழுத்துப் பிழைகளில் கொஞ்சம்
கவனம் செலுத்தலாம்
உ.ம்.உன்னத/ ஆளலாம்
அளவாய் பகிர்ந்து
அழகாய் வாழ்வோம்..//
அருமையான கருத்து.
வாழ்க வளமுடன்.
//அகந்தைக்கு அகப்பட்டு
அள்ளி வீசிடும்
அநியாய வார்த்தைகளால்
அழிந்திடும் சம்ராச்சியம்...//
அருமையாக சொன்னீர்கள்....
//என்ன விலை கொடுத்தும்
விட்டுட்ட வார்த்தையை
மீட்டு இட முடியுமா
வலிபட்ட நெஞ்சத்திலிருந்து...//
இதனால் முறிந்த நட்பு, சொந்த, பந்தம் எத்தனை எத்தனை.....
அருமையாக சொன்னீர்கள்....
Post a Comment