சின்ன சின்ன சொற்கள் சேர்த்து
எண்ணுக் கணக்கேயில்லாமல்
எத்தனையோ நாளிகைகள்
செலவு பண்ணி
வண்ணமயமாக வடித்திட்ட-நம்
நட்பெனும் சின்னமதை
சில நொடியில்சிதைத்திடத்தான்
முடிந்திடுமா?
உள்ளத்தில் உரைந்திட்ட
உண்மையன்பை மறைத்திட்டு
உதட்டுவழி உரைத்திட்ட
உறுதியற்ற வார்த்தைகளால்
உடைந்திடுமா நம் அன்பு?
கடந்து வந்த பாதையிலே
பழகி வந்த பல பாசங்களை
பரிகொடுத்து பறிதவிர்ககும்
உன் உள்ளத்தில் இன்னோர்
துன்பத்தின் பதிவைப்
பகட்டாய் கூட பார்ப்பதற்க்கு
பலமில்லை என்னிடத்தில்
எதிர்பார்பு எதுவுமின்றி
எம்மிடையே மலர்ந்த நட்பில்
ஏக்கங்களோ மனத்தாக்கங்களோ
இனியும் இல்லாமல்-இவ்
பிறப்பில் மட்டுமல்ல
இனி மலரும் ஜென்மங்கள்
அத்தனையிலும் இணைந்திருப்போமே...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான கவிதை சூப்பர்...
அருமை.கொஞ்சம் எழுத்துப் பிழைகளை
மட்டும் கவனித்துச் செய்தால்
இன்னும்சிறப்பாய் இருக்கும்
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
Post a Comment