RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

உறவுகள்....உறவு என்பது உலகில்
உருவான விதம் என்ன
உருவாகும் நிலை எது
உருமாறும் குணம் தான் யாது???

விதிக்கப்பட்ட விதிவிலக்கா
தொடர்ந்து வரும் தொடர்கதையா
விடைகான முடியாத-ஓர்
வினாபோல் ஆனா விடுகதையா
நிலைமாறும் உலகில்
நிறம் மாறும் ஓர் இனமா???

எத்தனை வரையறையென சொல்ல
எல்லை யெதுமில்லை இங்கே
தொல்லை என் எண்ணி
தொடர்பு அறுத்து விடுவோர் பலர்
வல்லமைதான் வாழ்க்கையென
வழி சொல்லிக் கொடுப்போர் சிலர்...

உறவாக இருந்த போதும்
உதறிவிடும் உறவுகளுக்கிடையே
உடலாக நாமிருக்க-எமது
உயிராக தமியங்கும் உயர்
உன்னத உறவுகளும் ஓர்வகையே...

உலகுக்கு எமைத்தந்து
உதிரத்தை உணவாக்கி
உளஉடல் உழைப்பாலே
எமைத் தாங்கும் எம் தெய்வங்களுக்கு
வகை நிலை சொல்ல-இந்த
வையத்தில் யாருமில்லை...


 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.......பரந்த இந்த பூமியின்
பாகத்திலே ஓர் ஒளி
வருடிச் செல்லும் தென்றலிலும்
வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது..

வானத்து மதி வரவால்
விண்மீன்கள் சிரிப்பதுபோல்
வையகத்து உன் வரவால்
வம்சமே மகிழ்கிறது....

முகத்தினிலே புன்முறுவல்
குணத்தினிலே குழ்ந்தையுள்ளம்
எண்ணத்தில் நல்ல வண்ணம்-இது
என்நாளும் நிலைக்கனும்
உன் அகத்தினிலே......

உயர்ந்த குணம் அனைத்தையுமே
உனக்கு உரியதாக்கி
அன்பின் அவதாரமாய்-நீ
அகிலமதில் அவதரித்ததனால்
அனைத்துயிரும் அகம் மகிழ்ந்தனவே...

குழ்ந்தையாய் குவளயத்தில்
வசந்தம் வீசியே வந்துதித்த-உன்
வாழ்வில் என்நாளும்
இன்பமே பொங்கிட-நீ
இவ்வுலகில் உதித்திட்ட
இன்நன்நாளில் நானும்
நல்வாழ்த்துக் கூறுகிறேன்....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நம்பிக்கை..

நாணயம் கொடுத்து
வாங்குவதில்லை நம்பிக்கை
முயற்சிக்கு துணையாய்
முன்னேற்ற பாதையில்
பயணத்தை தொடர
பயத்தினை தூரத்தி
உள்ளத்தில் இருந்து
உத்வேகத்துடனே உறுதியை
வழங்குமே நம்பிக்கை

இரவின் பின்பே
விடியல் என்பதும்
கிழக்கே சூரியன்
உதிக்கும் என்பதும்
பிறக்கும் உயிர்க்கு
ஓர் நாள் மரணம் என்பதும்
இயற்கையின் நீதியாய்
இறைவன் வகுந்த நம்பிக்கை

தன் தனையன் மீது வைத்த
தந்தை தாய் அன்பிலும்
கணவன் - மனைவி
காதலுக்கிடையிலும்
பாசத்தை கொடுத்தே
படருதே நம்பிக்கை

உள்ளத்தில் பிறந்து
உன்னை வளர்க்கிறது
உதிரத்தில் வளர்ந்து
உறவை பெருக்குது
இரு கைகள் இழந்திட்ட போதிலும்
இதயத்தில் நம்பிக்கை வைத்தால்
இன்புற வாழலாம்
இவ் வையத்தில் இணைந்தே....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உரிமை நிலைத்திடும்...உதிரத்தில் எழுந்திட்ட
உணர்விணை உழைப்பாக்கி
உடலினை உரமாக்கி
உரிமைக்காய் போராடும்
உள்ளங்களோடு உறவான
உயிர்க்ளைப் பிரித்திட
இனவெறி கொண்டோர்
நிகழ்ந்திட்ட கொடூரத்தால்
கொதிக்குது நெஞ்சம்
தினம் தினம்............

முள்ளி வாய்க்காலோடு
முடிந்திட்டதாய் போர்
முரசு தட்டுவோரே சற்று
மூழ்கி யோசியுங்கள்!!

ஆசை ஆவல்கள்
அடையப் படமலே
துடிக்கத் துடிக்கத்
நீதிக்கு மாறாய்
நெரிக்கப்பட்ட உயிர்கள் அவை....

அவலம் நிறைந்த
அழுகுரல் ஒலியிலும்
அனலாய் பொழிந்திட்ட
குண்டு மழைச்சத்தத்தாலும்
அவசரப்பட்டு அகிலம் வந்து
அவலத்தைப் பார்த்த
குழந்தைகளின் குருதியிலும்....

தறி கெட்டுவந்து
தன்னிலைமை மறந்த
நெறி கெட்ட கூட்டத்தால்
கதறக் கதறக் கற்பழிக்கப்பட்ட
தங்கையுடன் பிறந்தவர்கள்
தாரத்தைத் துறந்தவர்கள்-சோக
தாகம் தீரவில்லை இன்னும்...

மூளைவளர்ச்சி குன்றிய பிள்ளை
முடங்கிக்கிடக்கும் தந்தை-என
உருவத்தால் உருக்குழைந்து
உயிர்வாழும் உறவுகள் நிலையால்
உறக்கமின்றி தவிக்கும் விழிகள்...

ஆடிப்பாடி வேலைசெய்து
அகம் மகிழ்ந்திருந்தவரை
அடைக்கப்பட்ட கம்பிகளின் பின்
அன்புறவுகளின் வரவுக்காயும்
அரைவயிற்றுக் கஞ்சிக்காயும்
அனல் கொதிக்கும் வெயிலில்
வெந்த காயமும் இன்னும் ஆரவில்லை...

உண்மைகள் வெளிவர
உணர்வுகள் பொங்கிட
உரிமையை வென்றிட
உழைததவர் உயிர் தியாகம்
உலகினில் நிலைத்திடும் என்றும்....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இதுதா(உ)ன் பாசமா???


பாசம் இது வெறும்
வேசம் என உனக்கு
படம் பிடித்துக் காட்டிட்டு
உறவாக உருவெடுத்து
உன்னிடத்தில் இடம் பிடித்த
உள்ளம் ஓன்று.....

பழகிவந்த பாதையிலே
பதிந்து வந்த சுவடுகள்
புழுதிபட்டே அழிந்திடுமென
அந்தநொடிவரை அறியாமலே
அன்பை வளர்த்துவிட்டாள்...

உற்சாகம் பொங்கிடவே
உறுதிதனை நிலைநாட்ட
அழைப்பெடுத்த அந்நொடியில்
உதடுகளை ஊமையாக்கி-என்
உண்மையன்பை ஊனமாக்கி
ஊதசினாப் படுத்திவிட்டான்.

அன்பினிலே அண்ணானாய்
துவண்டபோது தோழனாய்
கணனியுலகில் கைத்துணையாய்
காலமெல்லாம் கைகோப்பான்
என்பதெல்லாம் வெறும்
கனவாகிப் போனதுவே
கண்ணிமைக்கும் நேரத்திலே..

அன்பெனும் ஊற்றாக
உனை என்னி வாழ்ந்தவள்
உலர்ந்த காற்றில் மிதந்து வந்த
உவர்நீர் சிறுதுளியென்ற
உண்மை அதனை உன்
உறவால் உணர்ந்துகொண்டாள்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வசந்தம் வீசிடவே........

வசந்தகால பருவமிதில்
மொட்டவிழ்ந்த மலர்கள் இவை
வாழ்க்கை என்னும் பந்தத்தில்
வாசம் வீசி இணைந்தவாம்

பரந்த இந்த பூமியினிலே
பாசம் என்னும் நீருற்றி
அன்புடனே அறம் வளர்த்து
அறுகுபோல் வேர் ஊன்றி
ஆழ மரமாய் நீவிர் வாழ...

நற் சங்கதி சொல்லியே
சந்ததம் பாடிட
நறுமணம் பொங்கவே - இவ்
இருமணம் இணைந்திட்ட
இனிய இன்நாளாய்
இனிவரும் நாட்களும் மலர
இறைவன் துணை வேண்டி
இனிதே வாழ்த்துகின்றோம்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS