நாணயம் கொடுத்து
வாங்குவதில்லை நம்பிக்கை
முயற்சிக்கு துணையாய்
முன்னேற்ற பாதையில்
பயணத்தை தொடர
பயத்தினை தூரத்தி
உள்ளத்தில் இருந்து
உத்வேகத்துடனே உறுதியை
வழங்குமே நம்பிக்கை
இரவின் பின்பே
விடியல் என்பதும்
கிழக்கே சூரியன்
உதிக்கும் என்பதும்
பிறக்கும் உயிர்க்கு
ஓர் நாள் மரணம் என்பதும்
இயற்கையின் நீதியாய்
இறைவன் வகுந்த நம்பிக்கை
தன் தனையன் மீது வைத்த
தந்தை தாய் அன்பிலும்
கணவன் - மனைவி
காதலுக்கிடையிலும்
பாசத்தை கொடுத்தே
படருதே நம்பிக்கை
உள்ளத்தில் பிறந்து
உன்னை வளர்க்கிறது
உதிரத்தில் வளர்ந்து
உறவை பெருக்குது
இரு கைகள் இழந்திட்ட போதிலும்
இதயத்தில் நம்பிக்கை வைத்தால்
இன்புற வாழலாம்
இவ் வையத்தில் இணைந்தே....
4 comments:
அருமையான கவிதை சகோ
நம்பிக்கை வீண் போகாது !
Nice!
உங்கள் கவிதை நம்பிக்கையின் விதை.இன்னும் வீர்யமாக எழுதுங்கள்.
ஆரண்யகாண்டம்-படமாஎடுக்கிறானுங்க...மயிறானுங்க...என்ற பதிவைக்காண எனது வலைப்பக்கத்திற்க்கு அன்போடு அழைக்கிறேன்
[முந்தைய பதிவு; ஹாலிவுட்காரன்கள் எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி படமெடுத்து விட்டான்கள்.]
Post a Comment