RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

உரிமை நிலைத்திடும்...



உதிரத்தில் எழுந்திட்ட
உணர்விணை உழைப்பாக்கி
உடலினை உரமாக்கி
உரிமைக்காய் போராடும்
உள்ளங்களோடு உறவான
உயிர்க்ளைப் பிரித்திட
இனவெறி கொண்டோர்
நிகழ்ந்திட்ட கொடூரத்தால்
கொதிக்குது நெஞ்சம்
தினம் தினம்............

முள்ளி வாய்க்காலோடு
முடிந்திட்டதாய் போர்
முரசு தட்டுவோரே சற்று
மூழ்கி யோசியுங்கள்!!

ஆசை ஆவல்கள்
அடையப் படமலே
துடிக்கத் துடிக்கத்
நீதிக்கு மாறாய்
நெரிக்கப்பட்ட உயிர்கள் அவை....

அவலம் நிறைந்த
அழுகுரல் ஒலியிலும்
அனலாய் பொழிந்திட்ட
குண்டு மழைச்சத்தத்தாலும்
அவசரப்பட்டு அகிலம் வந்து
அவலத்தைப் பார்த்த
குழந்தைகளின் குருதியிலும்....

தறி கெட்டுவந்து
தன்னிலைமை மறந்த
நெறி கெட்ட கூட்டத்தால்
கதறக் கதறக் கற்பழிக்கப்பட்ட
தங்கையுடன் பிறந்தவர்கள்
தாரத்தைத் துறந்தவர்கள்-சோக
தாகம் தீரவில்லை இன்னும்...

மூளைவளர்ச்சி குன்றிய பிள்ளை
முடங்கிக்கிடக்கும் தந்தை-என
உருவத்தால் உருக்குழைந்து
உயிர்வாழும் உறவுகள் நிலையால்
உறக்கமின்றி தவிக்கும் விழிகள்...

ஆடிப்பாடி வேலைசெய்து
அகம் மகிழ்ந்திருந்தவரை
அடைக்கப்பட்ட கம்பிகளின் பின்
அன்புறவுகளின் வரவுக்காயும்
அரைவயிற்றுக் கஞ்சிக்காயும்
அனல் கொதிக்கும் வெயிலில்
வெந்த காயமும் இன்னும் ஆரவில்லை...

உண்மைகள் வெளிவர
உணர்வுகள் பொங்கிட
உரிமையை வென்றிட
உழைததவர் உயிர் தியாகம்
உலகினில் நிலைத்திடும் என்றும்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

arasan said...

நிச்சயம் உண்மைகள் வெல்லும் ...
தியாகங்கள் வீண் போகாது ...

கவி அழகன் said...

ஆசை ஆவல்கள்
அடையப் படமலே
துடிக்கத் துடிக்கத்
நீதிக்கு மாறாய்
நெரிக்கப்பட்ட உயிர்கள் அவை...

பொங்கி எழும்
போர்க்கொடி தூக்கும்
வந்த பகையை
பிளந்து கட்டும்

இரத்த குழம்பில்
கொதிக்கும் இதயங்கள்
வேடிதுசிதரும்
பகைவன் முனாலே

Post a Comment