பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.......
17:00 |
பரந்த இந்த பூமியின்
பாகத்திலே ஓர் ஒளி
வருடிச் செல்லும் தென்றலிலும்
வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது..
வானத்து மதி வரவால்
விண்மீன்கள் சிரிப்பதுபோல்
வையகத்து உன் வரவால்
வம்சமே மகிழ்கிறது....
முகத்தினிலே புன்முறுவல்
குணத்தினிலே குழ்ந்தையுள்ளம்
எண்ணத்தில் நல்ல வண்ணம்-இது
என்நாளும் நிலைக்கனும்
உன் அகத்தினிலே......
உயர்ந்த குணம் அனைத்தையுமே
உனக்கு உரியதாக்கி
அன்பின் அவதாரமாய்-நீ
அகிலமதில் அவதரித்ததனால்
அனைத்துயிரும் அகம் மகிழ்ந்தனவே...
குழ்ந்தையாய் குவளயத்தில்
வசந்தம் வீசியே வந்துதித்த-உன்
வாழ்வில் என்நாளும்
இன்பமே பொங்கிட-நீ
இவ்வுலகில் உதித்திட்ட
இன்நன்நாளில் நானும்
நல்வாழ்த்துக் கூறுகிறேன்....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான கவிதை
அருமையான கவிதை சிவரதி..
Post a Comment