அழகான வாழ்க்கைக்கென
அரும்பி வரும் ஆசைகளை
அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள்
அயலவர் உறவினர் உதவியுடன்
உற்றதுணை இதுவெனவே
உறுதியளித்திட்ட பின்னரே
உள்ளம் கொடுத்தால்
அவனுக்காய்........
அன்பாய் கதை பேசி
ஆசைகள் பல பகிர்ந்து
ஆறுதல்கள் பல கூறி
ஐந்து நிமிட இடைவெளியில்
ஆறு தடவை அழைப்பெடுத்து
அழகாயே வளர்ந்து வந்த
அவர்கள் தம் உறவு
நீண்ட நேரம் கதை பேசி
நெடுங்காலமதை திட்டமிட்டு
புரிந்துணர்வு கொண்டே
புது திட்டம் தீட்டி -பூமியிலே
புகழ் பரப்பி வாழ்ந்திடவே..
கனவுகள் பல சுமந்து
கற்பனைகள் பல உடனே
தன்னவனை காண சென்றவளை
தவிக்க விட்டதன்
காரணம் தான் என்ன?
புரியாமல் புலம்புவது - அவள்
உருவம் மட்டுமல்ல
புடைசூழ்ந்த சொந்தமுமே
நாக்கு புரள்கிறது
அவன் வேசம் விலகியதால்
நாகரீக உடையணிந்து
நடப்பாய் திரிந்தாலும்
நடைப் பிணமே இனி
நாள் எல்லாம் அவன்......
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment