RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

வாழ்த்துக்கள்....

வளமான வருங்கால வாழ்க்கைக்காய்
தினம் தினம் அவரவர் போடும்
வண்ணக் கோலங்கள் தான்
எத்தனை எத்தனை?

கண்களில் களம் அமைத்து
கண்னாளே பல கதை பேசி
காதலிலே கலந்தவராம்

உதட்ரோர புன்னகையால்
ஊமை தாமாகி
உள்ளம் கொடுத்தவராம்

பதினெட்டு வயதினிலே
பள்ளி பருவத்திலே உருவான
பருவ காதலராம்

உயர் கல்வி படித்து
உத்தியோகம் தேடிச் சென்று
ஊதியத்தை மட்டுமன்றி
உற்ற துணையும் தேடி வந்தவராம்

பல நாள் பயணங்களில்
பக்க துணையாய் இருந்ததினால்
வாழ்க்கைத் துணையானவராம்

தவறி வந்து அழைப்பதினை
தடை செய்யாமையினால்
தன்னவரானவராம்

இடையராது முயற்சியினால்
இடையூறு மத்தியிலும்
இணைய வழி வந்து
இதயத்தில் இடம் பிடித்தவராம்

மனதினிலே இருத்திவிட்டு
மொழியினை மெளனமாக்கி
மெய் மறந்து வாழ்பவராம்

உணர்விலே பிறந்து
உயிரினிலே கலந்து
உள்ளங்கள் பரிமாறியும்
உரைக்க முடியாமல் இருப்பவராம்

முகமே தெரியாமல்
முகவரி அறியாமல்
புள்ளிகள் பல வைத்து
புதிராய் வாழ்பவராம்

என்னென்னோ விதங்களில்
பாசம் என்னும் வலைவீச்சி
இதயங்கள் இடமாறி
காதலில் கலந்தவரே - உங்கள்
எண்ணகள் தழைத்தோங்கி
எதிர்பார்ப்பு நிறைவேற
வளமான வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை.....

Post a Comment