சுற்றும் முற்றும் பார்த்தேன்
சொந்த பந்தம் சேர்ந்து
சாதி மதம் அறிந்து
சாதகமும் பார்த்து
சேர்ந்து வைத்த உறவு இது
உரிமைதனை வாங்கி
உறவுகளை கொடுத்து
உணர்வுகளை பரிமாறி
உள்ளங்களை சுமந்து
இல்லறத்தில் இணைந்தது..
உள்ளத்தில் உள்ளவற்றை
எல்லைகளை வரையறுத்து
ஏங்கங்களை தனதாக்கி
ஏற்ற இறக்கம் பல கொண்டே
எப்படியோ பரிமாறியது
நாளாக நாளாக
நலத்திலே அன்பு பெருகு
நல்லதும் கெட்டதும்
நாணமின்றி நடமாடுதிங்கே
அன்பு பெருக
அந்தஸ்து ஒழிய
ஆசைகள் ஒடுங்கியே
அழகிய நந்தவனமாய்
பூத்துக் குலுங்கியது - அவர்
புது வாழ்வு.....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை அருமை ரசித்தேன் ரசித்தேன்...
நன்றிகள்
Post a Comment