வாழ்க்கை என்னும் பயணத்தில்
வாலிப நெஞ்சங்களின்
வடு நிறைந்த வழிகளை
வடிக்க முடிந்திடுமா?
வார்த்தைகளை கொண்டிங்கு
பள்ளி பருவத்தில்
அள்ளி வரும் கனவுகளை
தள்ளியே வைத்து விட்டு
துள்ளி ஓடுகிறான்
சல்லி பணத்திற்காய்
இல்ல நிலையறிந்து
இல்லாமை போக்கிடவே
உள்ளத்தை பணம்
உள்ளவர்க்கே உரிமையாக்கிடுவர்
தேடியே வேலை தினம்
வாடியே போனதினால்
நாடி வந்த உறவெல்லாம்
ஓடியே போயினவே
பாசத்தோடு பாடியாடி
வாசம் வீசும் வசந்தங்களை
தோசம் கொண்டே - எம்
தேசம் வந்தவர்கள்
நாசம் செய்து போயினரே
அன்பினை அரவணைக்கும்
அகிலம் இதாம் - ஆனால்
அன்பு கொண்ட நெஞ்சங்களில் - தினம்
ஆகுதி வளர்கின்றதே
இளமை காலமதை
இனிமையாக்கிடவே
வழமைக்கு மாறாக
வடம் பிடித்தே
வாழ்வை வளம் படுத்திடுவோம்
வாரீரே வலிப நெஞ்சங்களே.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அருமை......
Post a Comment