RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

பாசமகளே....அம்மா என்று நீ அழைக்க முன்பே
அன்பு முத்தம் நாம் பொழிய
ஆசையுடன் உனைத்தூக்கி
அகிலமிதை வலம் வருவோம்...

உறவுகள் எல்லாம் புடைசூழ்ந்து
உன் வாழ்வை அலங்கரிக்க
ஊதட்டினில் என்றும் புன்னகையும்
உள்ளத்தில் நல்ல வண்ணங்களும் மலர்ந்திடனும்...

பண்புடனும் பணிவுடனும் - நற்
பழக்கங்களுடனே பட்டங்கள் பலபெற்று
பாரெல்லாம் போற்றும் -  எம்
பாச மகளாய் நீ திகழ்ந்திடனும்.....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உறவுகள்...அன்னையுடன் தந்தை இருவருமே
அகிலமிதில் முதல் உறவாம்
உதிரத்தை எம்முடனே பகிர்ந்த
உடன்பிறப்புக்கள் எம்  உறவாம்...

தாய்வழி அண்ணை தம்பி எம்
தாய்மாமன் உறவாக அவருடன்பிறப்பாய்
தாய்போல எமைக்காக்கும் சிறியதாய்
பெரியதாயும் எம் உறவே....

அன்பாலே எமை அணைக்கும் தந்தையின்
அண்ணான் தம்பியாய் அவதரித்து
 அன்பை பொழியும் சித்தப்பா பெரியப்பாவும்
தந்தைவழி எம் உறவே...

அன்பின் பொங்கிசமாய்
அனுபவ அறிவின் அடியுற்றாய்
அகிலமதில் நாம் பெற்ற அரும் செல்வங்கள்
அம்மாம்மா தாந்தாவுடன் அப்பாப்பா அப்பாம்மா....

உதிரத்தால் வந்த உறவுகள் மத்தியில்
உண்மை அன்பினை பகிர்த்தளிது
உள்ளத்தில் இடம் பிடித்த அன்புள்ளங்கள் பல
உலகத்தில் இன்று  எம் உறவாக...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இரண்டாண்டில்....இறைவன் வகுத்த பந்தமாம்
இல்லறம் இதில் இன்பமுடன்
இனிதே இனைந்த இருயிர்கள் நாம்
இரண்டாண்டில் கால் பதிக்கின்றோம்...

இளமையும் இன்பமும் எமைசூழ
இன்னல்கள்  எம்மை நெருங்காது என்றும்
இன்னருள் செய்தருள வேண்டுகின்றோம்
இறைவா உன்னையே தினம்...

புரிந்துனர்வும் புன்னகையும் பெருகிட
புத்துயிரே உனை எதிர்பார்த்தே
புதுவசந்தம் பொங்கிடவே
புலர்கின்றது  பொழுதுகள் ஓவ்வொன்றும்....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தாய்மை...
அறியாத ஓர் சுகம்
அளவில்லா ஆனந்தம்
அன்பாலே புடைசூழ - உணர்கின்றேன்
அகிலமிதில் தினம் தினம் புதுவசந்தம்...

புரிந்திணர்வும் பூரிப்புடனும்
புன்னகையே பொழியுதம்மா
பூமியிலே புதுவரவாய் - நீ
பூத்திடும் அன் நாளையெண்ணி...

எம் வாழ்க்கையில் ஓர் உறவாய்
எம்  வம்சமிதில் புதுவரவாய்
தாய் தந்தை  நாம் மகிழ - வந்துதித்த
தவக்குழந்தை நீ அம்மா.....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வாழ்த்தி வணங்குகின்றோம் .


 அகிலம் இதில் நாம்
அவதாரம் காண்பதற்காய்
அந்திபகல் கண்விழித்து
ஐயிரண்டு திங்களாய்-  உங்கள்
அகத்தினிலே எமை தாங்கி
அன்புதனை அமுதாக்கி - எமை
ஆளாக்கிய அன்னை வாழ்த்துகின்றோம்...

 உச்சரித்தோம் முதல் முதலில்
ஓர் வார்த்தை - தன்
உதிரத்தில்  எம்
உருவத்தை உருவடித்து
கருவமைத்து இவ்வுலகம்
காண வழி சமைத்த
எம் கண் கண்ட தெய்வம்
அம்மாவே உங்களை வாழ்த்துகின்றோம்...
  
உலகத்தில் இல்லையம்மா
உவமை சொல்ல வார்த்தைகளால்
ஊங்களுக்கு  ஈடேதும்
தவழும் வயதினிலே எமை
தாய் மடியில் தாங்கி
இளமைப் பருவத்தில் 
இமையாய் இருந்து துன்பம் எமை 
தொடாமல் இருப்பதற்காய்
தூக்கத்தினை மறந்தா - எம்
பெற்றோரே உங்களை வாழ்த்துகின்றோம்..

ஆயுள் வரை ஆருயிராய்
அன்பில் அமுத சுரபியாய்
எமை ஆளும் அன்னை தந்தையே
அனுதினமும் உங்களை - நாம்
வாழ்த்தி வணங்குகின்றோம் ......

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அன்பு வாழ்த்துக்கள்......


அகிலமதை அலங்கரிக்கும்
ஆதவனுக்கு அணைவரும் கூடி
அகம் மகிழ்ந்து அன்புடனே
நன்றி செலுத்தும் இன் இனிய
நன் நாளிலே அவதாரித்த எம்
அன்பு மாமாவை வாழ்த்துகின்றோம்...

உலகுக்கு ஓளி கொடுக்க தினம்
ஓயாமல் உழைக்கும்
வானத்துச் சூரியன் போல்
வையத்தில் எம் வாழ்வு சிறக்க
ஓயாமல் உழைக்கின்ற எம்
அன்பு தந்தையை வழ்த்துகின்றோம்...

படிக்கற்கள் பல தாண்டி
பாரினிலே நாம் சிறக்க
பாசத்தின் உறைவிடமாய் இருப்பவரே
பரந்த இப் பூமி கூட போதுதில்லை உங்கள்
பாசத்திற்க்கு எல்லை சொல்ல எம்
அன்பு தாத்தாவை வழ்த்துகின்றோம்...

நாம் வாழும் காலமெல்லாம்
வளமுடனே எம்மருகே
எந்நாளும் நீங்கள் இருக்க
நாளும் நாம் நலம் வாழ - நீங்கள்
தினம் அழைக்கும் ஆண்டவனை
நாமும் அழைத்தே வரம் வேண்டி

இனிய நல்நாளில் வாழ்த்துகின்றோம்..

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS