சின்னஞ் சிறார்கள் எம்மை
வண்ண வைரங்களா வாழ்வில்
மின்ன வைப்பதற்காய்
என்நாளும் உண்மையாய் உழைக்கும்
உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்களை
இன்நாளில் வாழ்த்திடுவோம்...
உள்ளத்தில் கள்ளமின்றி
நெஞ்சத்தில் வஞ்சமின்றி
பஞ்சமின்றி கல்விதனை
அள்ளி அள்ளி வழங்கியே
நல்லறிவை நமக்குட்டி
நாளைய சமூகத்துக்காய் இன்றே
உழைப்பவர்கள் ஆசிரியர்கள்...
கடமை கண்ணியம்
காட்டுப்பாட்டுடனே
கண்ணான கல்விதனை - இனிய
கணியாக எமக்களிக்கும் ஆசிரியர்களை
இன்றல்ல என்றென்றும்
வாழ்த்தி வணங்கிடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment