கண்முடி முழிக்கும்
கனப்பொழுதில் காலனவன் - தன்
பாசக்கயிற்றை வீசியதால்
பறிபோனது அவள் தாலிக்கயிறு மட்டுமா
பரிதவிக்குதே வழிதெரியாது அக்குடும்பமே...
மஞ்சள் குங்குமத்தினை இழந்து - அவள்
பிஞ்சுமனம் இரண்டை கையில் சுமந்து
பஞ்சத்தில் வாடுகிறாள் - நீ
கொஞ்சத் தூரம் செல்ல முன்னே- பார்க்க
நெஞ்சம் குமுறுதையா இன்நிலையை...
மின்னல் என வாழ்வைக் கொடுத்து
இன்னல்கள் பல விளைவித்து
சின்ன வண்ணக் கோலம் போட்டு
எண்ணம் போல எடுத்தடி வைக்கையிலே
இறைவா இடையில் பறித்தது ஏனோ....
குமுறும் அவள் இதயத்துக்கும்
குழந்தைகளும் வார்த்தைகளால்
ஆறுதல் சொல்ல முடியவில்லையானாலும்
அன்னர் ஆன்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
ஓம்சாந்தி சாந்தி சாந்தி....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment