அந்நியா நாட்டிலே
அடைக்களம் புகுந்த இவள்
அறிந்து கொண்ட ஓர் - புது
அனுபவம் இது........
வசதிகள் பலவுடனே
வகை வகையாய் வைத்தியம்
தனித்திருந்தாதனால் - நானும்
தவிந்து விட்டேன் தனிமையிலே...
வலியாலே உடல் துடிக்க
மொழி புரியாது முழிமுழிக்க
ஆதாரவாய் என்னை நானே
அரவனைத்தேன் அன்புடனே - என்
அருகில் யாருமில்லா வேளைகளில்...
நோய் எதிர்ப்பு உனக்கில்லையென
தாய்வீட்டில் தனிக் கவலையெழ
காய் கறிகள் மட்டும் உண்ட இவள்
வாய் மருந்து என இன்று
எதை எதையோ உண்கிறதே....
உதிரம் எடுக்கையிலும்
ஊசி கையில் போடுகையிலும் இரவில்
உறக்கமின்றி தவிக்கையிலும்
உதிரும் கண்ணீருடனே ஊர் நினைவுகளும்
உருண்டோடியே கரைந்தன
கடந்த சில நாட்களாய் வைத்தியசாலையில்.....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment