தன் தலைமுறையை தனதாக்கி
தன் மார்பில் எமைத் தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே எம் தந்தை
எடுத்தடி எடுத்து வைக்கையிலும்
ஏடுடெடுத்து படிக்கையிலும்
எம்ருகே தானிருந்து
தன் வலியாய் தாங்கிட்டார்
எம் வலிகள் அத்தனையும்
முதல் எழுத்துடனே உறவின்
முகவரி அளித்து அன்பின்உருவாய்
ஆசானுமாய் அரவணைத்தே
அகிலமதில் அடி எடுத்து வைக்க
அரண்மனை அமைந்த அன்புருவே
இவ்வூலகில் இன்னல்கள் பல தாண்டி
இணையற்ற அன்பளித்தே
இரவு பகல் எமை சுமந்த தந்தையே
உமை உலக தந்தையார் தினம்
இன்றல்ல என்றொன்றும் நாம்
உளமார வணங்கி வாழ்ந்திடுவோம்....
0 comments:
Post a Comment