புஷ்பமாய் திகழ்ந்தவளே நீ
பாதியிலே எமைப் பிரிந்து சென்றதனால்
பதறுதம்மா எம் உள்ளமெல்லாம்...
உதட்டினிலே புன்னகையும்
உள்ளத்தில் உண்மையன்புடனும்
உரிமையுடன் எமை அழைத்து
உபசரிக்கும் உமை இனி
ஊரில் காணமுடியாமையை எண்ணி
உள்ளம் கலங்குதம்மா....
கண்மூடி முழிக்கும் கணப்பொழுதில்
காலனவன் உன்னுயிர் பாரித்ததினால்
கதிகலங்கி நிற்குதம்மா உன் குடும்பம்..
அன்பான உன் கனவனுடன் முத்தான்
மூன்று புதல்வர்களும் தம்
ஆரூயிர் அன்னை உனை இழந்து
அழறும் சத்தம் உம் காதில் விழவில்லையா....
உடன் பிறப்புக்களுடன்
உறவுகளும் கூடிடவே உன் பிரிவால்
ஊரே குமுறும் இறுதிவேலையில் கூட
உன் முகம் பார்க்க முடியாமையால்
உள்ளம் கலங்கிறது புஷ்பாமச்சளே ...
குமுறும் எங்கள் இதயங்களுக்கும் உம்
குடும்பத்துக்கும் வார்த்தைகளால்
ஆறுதல் சொல்ல முடியாவில்லையானாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திப்போப்...
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
0 comments:
Post a Comment