இறைவன் வகுத்த
பந்தம் அதில்-இன்று
இணையும் இரண்டு
இதய சொந்தங்களின்
இனிய உறவு என்னாளும்
இளமைக்கால தென்றலுடன்
இன்ப ராகம் இசைத்திடவும்....
சின்ன சின்ன
புள்ளி வைத்தே போட்ட
எண்ணக் கோலமெல்லாம்
நல் வண்ணங்களாக
நாளும் வாழ்வை
அலங்கரித்திடவும்...
வசந்தம் வீசும் உம் உறவு
ஆழ்போல் தழைத்து
வானுயரப் புகழ்பரப்பி
அறுகு போல்வேரூன்றி
வாழையடி வாழையாக-உம்
வம்சம் தழைத்திடவும்....
வாழ்வெனும் ஆனந்த ஊஞ்சலில்
அமர்ந்திடும் உள்ளங்களை
அனைத்துலக ஜீவராசிகளும்
அகம் அது மகிழ்ந்து
ஆசிகள் கூறிடவே
வளம் பல பெற்று
வளமுடன்வாழ-இறை
வரம் வேண்டி நானும்
மணநாள் காணும் இன்னாளில்
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோன்...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிக அருமை
அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படியாக
மிக அருமையான வாழ்த்துமடலை
பதிவு செய்துள்ளீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்து மடலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
சிறப்பானதொரு படைப்பு . பகிர்வுக்கு நன்றி
Post a Comment