நன்மையோ தீமையோ
நான் அறியேன் ஆனாலும்
நடந்து வந்த பாதையிலே
நிகழ்ந்திட்ட நிகழ்வுகளால் - உன்
நிம்மதி இழந்திட்டதனை
நிமிட இடைவெளியில்
ஒலித்திட்ட உன் குரலில்
உணர்ந்து கொண்டேன்
உண்மை நிலைபுரியாது
உள்ளத்து உணர்வறியாது
உருவான இவ் உறவுக்காய்
உதிர்த்திட்ட நிமிடங்களும்
உரைதிட்ட வார்த்தைகளும்
மீட்டிட முடியாதவையே
அடித்திட்ட அலையிலே
தவித்திட்ட மீனுக்காய்
தண்ணீர் வார்த்த நீ - இன்று
கண்ணீர் வடித்ததால்
உவர் நீர் மீண்டும் கிடைத்ததால்
உவகை அடைந்தது - அது
உலர்ந்து போகும் என்பதை
என்னாத எம் உறவு போல்...
3 comments:
அசத்தல் கவிதை சூப்பர்....
உரைதிட்ட வார்த்தைகளும்
மீட்டிட முடியாதவையே//
கொட்டிய வார்த்தைகளை அள்ல முடியாது தான்.
அருமை சிவரதி
Post a Comment