காலைஞ் சூரியன் தன்
கதிர்களை பரப்பி
உதிர்த்திடும் புன்னகை
உலகுக்கு வெளிச்சம்...
கடலலை கூட
சலசல எனவே
பூங்காற்றுடன் கலந்து
புன்னகை சிந்துதே...
பூவினம் தம்
மொட்டினை அவிழ்த்தும்..
புல்லினம் தன்
சிறகினை விரிந்தும்-தினம்
சிந்துதே புன்னகை...
ஊர்வன தம்
உறவினை பகிர்ந்தும்
விலங்கினம் தம்
ஒலிகளின் அசைவிலும்
உதிக்குது புன்னகை...
புன்னகையில் கூட
புதுபுது அர்த்தம்
அன்பின் தன்மைக்கேற்ப
அதன்வகை மாறுமாம்...
புதிய உலகிலும்
புரியா மொழியிலும்
புரட்சியைக் கொடுத்தே
புதுத்தடம் பதிந்திடும் புன்னகை...
தினம் துன்பங்கள் தொலைந்தே
எங்கும் புன்னகை பூப்பதால்
இன்னும் இப்பூமி சுத்துது - அதன்
இன்பத்தின் இசைவிலே.....
3 comments:
//புன்னகையில் கூட
புதுபுது அர்த்தம்
அன்பின் தன்மைக்கேற்ப
அதன்வகை மாறுமாம்...//
அருமை அருமை....
இன்பத்தின் இசைவிலே.....
சுற்றும் பூமியின் புன்னகை மிக அழகு.
//////பூவினம் தம்
மொட்டினை அவிழ்த்தும்..
புல்லினம் தன்
சிறகினை விரிந்தும்-தினம்
சிந்துதே புன்னகை...
//////
அழகான ரசனை வார்த்தை அலங்காரம் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி
Post a Comment