அகிலமதில் அவள்பெருமை
அறியார் யார் உளரோ
ஆண்டவன் தொடங்கி
ஆண்டிவரையும் அவள்
அன்பினிலே எங்கும்...
பத்து திங்கள் பெரும்
பாடுபட்டே பக்குவமாய்
பாரினிலே பாதம் பதிக்க
வைத்த பாசத் தாயுமவளே...
துள்ளிலே திரியும்
பள்ளி பருவத்தே அன்பாய்
அள்ளியே அறிவை
சொல்லியே கொடுத்திடும்
ஆசனாய் அவளே...
நாடியே சென்றவளுடன்
ஜோடி சேர்ந்தே வாழ்வதற்காய்
தேடியே வேலை தினம்
வாடியே போகும்
வாலிபர் நிலைக்கும் காரணம்
வஞ்சி அவளே...
வாழ்வின் உயர்ச்சிக்காய்
முயற்ச்சி செய்து கணவன்
உழைத்த ஊதியத்தை
கச்சிதமாய் செலவு செய்தே
கடமைகளை நிறைவு
ஏற்றுபவளும் அவளே...
தள்ளதா வயதினிலும்
கைத்தடி கூடவே வந்து
கைவைத்தியம் பார்த்தே
தலைமுறை தளைத்திட
தளராமல் உழைப்பவளும் அவளே...
அன்பின் அரவணைப்பில்
அன்னையுமாய்
உறவைப் பகிர்தலிலே
உடன் பிறப்பாய்
பள்ளியிலே தோழியாய்
பருவவயதினிலே காதலியாய்
நோய்யுற்ற வேளையிலே தாதியுமாய்
மனம் கல்ங்கி நிற்கையிலே மந்திரியாய்
களத்தினிலே வீராங்கனையுமாய்
ஆழ்கடல் முதல் ஆகாயம் வரை
அணைத்திலும் அவள் சுவடுகள்
அகிலமெங்கும் பதிகின்றது...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை.தாயின் பெருமையை
மிக அழகாக சொல்லிப்போகும் உங்கள் படைப்பு
மிகவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
அருமையா உணர்ந்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துகள்...
Post a Comment