இன்பமயமான இனிய-எம்
இல்லமெனும் நந்தவனமதில்
இளம் தென்றலாய்
வந்துதித்த செல்வமகள் நீ...
புது வாசம் வீசியே
வந்த உன்வரவால்
உள்ளம் மகிழ்ந்தே-உறவில்
உயர் பதவிகள் பெருகுதம்மா...
சந்ததி பல பாடி
சரித்திரம் படைத்தே
சந்தோச ஊஞ்சலில்-நம்
சந்ததி தளைத்திட -உன்
சின்னப் பாதங்களை
வாழ்க்கை எனும்
வண்ணங் கோலமதில்
வளம் பெறப் பதித்திட-இறை
வரம் வேண்டி வாழ்த்துகிறேன்....
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சந்தோஷ ஊஞ்சலில் சந்ததி தழைத்திட
நானும் அந்த ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்
நானும் பிராத்திக்கிறேன்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
வளம் பெறப் பதித்திட-இறை
வரம் வேண்டி வாழ்த்துகிறேன்....//
முத்தாய்ப்பாய் வேண்டிய வரம் .
கேட்டது கேட்டபடி கிடைக்க இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன்.
செல்வமகள் வளமுடனும் நலமுடனும் வாழ நானும் வாழ்த்துகிறேன்.
Post a Comment