நட்பெனும் மேடையில்
நடக்குது நாடகம்-இங்கு
நவ நாகரிகத்துடன்
நவரசங்களும் கலந்தே....
இணைவதற்கு என்றே
இடைவிடாது அழைப்பெடுத்து
இதயத்தில் இடம் பிடித்த
இனிய உறவாம் ஓர் நட்பு...
சொந்ததில் வந்திட்ட
பந்தத்தில் பாதி பகிர்ந்தே
அன்பெனும் அர்த்தத்தை சேர்த்து
அரன் அமைத்திட்ட
அழகான நட்பு ஓன்று...
முகமது பராமல்
முகவரி அறியமால்
நல் நம்பிக்கை முன்வைத்தே
நகர்ந்திடும் நட்புக்கள்...
பார்த்திட்ட போதே
பழகிடத் துடித்து
கள்ளத்தை மறந்து
உள்ளத்தை பகிர்ந்திட்ட
உன்னத நட்புக்கள் பல...
நன்மையோ தீமையோ
நமக்கென என்னாது
நடிப்பினை மறந்து
நட்புக்காய் தனைமாற்றி
நாளும் உழைத்திடும்
நட்பெனும் அரங்கத்தில்
நானும் ஓர் அங்கமே....
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அழகான நட்பு ஓன்று...//
உங்கள் பதிவிற்கு வந்தபோது சந்தோஷமும்
ஆழ்ந்த நட்பும் கிடைத்த உணர்வு.
positive thinkings நிறைந்த தங்களுக்கு
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
Post a Comment