RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அகரம்...


அன்னை மடியினிலே
அவதரித்த நாள் முதலாய்
அறிகின்றேன் பாரினிலே
அர்த்தங்கள் பல கொண்ட
அலைமோதும் அசைவுகளை

அனைத்து உயிர்க்கும்
அம்மா என்பது முதல் வார்த்தை - அதில்
அழகு தவழுது தனியாக
அன்பு பெருகுது
அணை போட முடியாமல்

அர்த்தமே காண முடியாத
அதிசய பொருட்கள் பலவாம்
அறிவும் அதில் ஒன்றாம்
அநியாயங்கள் பல நடக்குது - அதை
அடங்கவும் முடியவில்லை
அழிவை நாடிச் செல்ல
அவர்கள் தேடிச் சென்று
அயராது உழைக்கும் வழியது

அசைகின்ற பொருள் தொடங்கி
அசையா பொருள் வரையும்
அகிலத்தில் அனைத்திலுமே
அகரம் நடத்துதே
அரசாட்சி இங்கே..

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

அவளின் வருகைக்காக......

தெருவோரம் செல்கையிலே
வழியோராம் நின்றவளை
விழியோரம் கண்டதினால்
மனதோரம் - ஒரு வருடல்
என் வாழ்க்கை துணையாக வருவாளா

கண்களிலே கணை தொடுத்து
காற்றினிலே காதல்
செய்தி சொல்லி - அவள்
காதோரம் அனுப்புகிறேன்

மூச்சு காற்றில் கூட அவள்
முகவரியை தேடிச் செல்ல
மனம் அங்கேயே
மண்டியிட்டு நிக்கிறது
கண்ணில் கலந்து
உணர்வில் உறைந்த
மங்கை உருவை - என்
மனைவி எனும் உறவாக்க...

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பணத்துக்காய்.....

புலம்பெயர் நாட்டிற்கு
புறப்பட்டு வந்தவரே-நீவீர்
பயணிக்கும் பாதையிலே
பள்ளங்கள் பலவிருக்கும்

பகலிரவு பாராமல்
பந்த சொந்தம் தேடமல்
பண்பாடு தனை மறந்து
பணத்துக்காக பறக்கின்ற
பலர் இங்கே...

சுற்றத்தார் மத்தியிலே
சுமையேதும் தெரியாமல்
சுகந்திரப் பறவையாய்
சுற்றித்திரிந்த உறவுகளே

சொர்க்க பூமியென நம்பி
சொந்தங்கள் துறந்து
சேர்த்து வைத்த சொத்தெல்லம்
செலவழித்து வந்த உறவுகளே

காலம் காலமாய்
கடந்து வரும் கொடுமையிது
உரிமைக்கு உணர்வில்லை
உறவுக்கு துணையில்லை
பணத்துக்காய் பக்கம் சாரும்
பகல் திருடர் மத்தியிலே
பாசத்தைப் பார்ப்பதெங்கே

காலத்தின் பாதையிலே
கடல் தாண்டி வந்தவரே
கஸ்டங்கள் பல கண்டு
கண் கலங்காதீர்
கடமைதனை கருமமாய் செய்து-நல்ல
காலம் வருமென காத்திருப்பீரே

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

எண்ணம்....

அன்பு கொண்ட நெஞ்சங்களே
ஆசைகள் பல வளர்த்து
இணைந்து சொல்லும் வழியில்
ஈடேற்றம் கண்டிடவே
உயர்வை நாடியே
ஊனுரக்கம் இல்லமால்
எண்ணமதை செயலாக்கி
ஏற்றம் பல கண்டுவிட்டால்
ஐயமின்றி சொல்லுகிறேன்
ஒளிரத் தொடங்கும் உம் வாழ்வு
ஓங்கியே செழிக்கும் என்நாளும்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பிடிவாதம்......

குழந்தைப் பருவத்தே- தாய்
கூடவே இருந்திட
குழறி அழுதிடும்-குழந்தையின்
குணம் பிடிவாதம்

எட்டியடி வைக்கையிலும்
ஏடேடுத்துப் படிக்கையிலும்
எதிர்படும் பொருட்கள் எல்லாம்
எனக்கே உரியதேன எண்ணிடும்
எண்ணமது பிடிவாதம்

காலை எழுந்து கடமைதனை முடித்து
கல்வி கற்க செல்ல
கள்ளமது உள்ளமையால்
கையிலில்ல பொருளுக்காய்
கால் குத்தியழும் பிடிவாதம்

கட்டிளமைப் பருவத்திலே
காளையரும் கன்னியரும் காட்டிடும்
கணக்கற்ற கள்ளத்தனங்கள்
காலத்தால் கூட
கட்டுப்படுத்த முடியாத பிடிவாதம்

ஆறு மாதம் முதல் தொடங்கி
ஆறுபது வயதுக்கு மேலும்
ஆறறிவு தொடங்கி-ஓர்
அறிவு வரையும் இந்த
அகிலத்திலே எங்கும்
அழியாது தொடருது பிடிவாதம்

நிலையற்ற இவ் உலகில்
நீர் குமிழி எண்னங்களை
நீங்கி விட்டு
நினைத்ததை முடிப்பதற்காய்
நிஜமாய் உழைக்கும் நெஞ்சங்களே-உம்
நினைவுகள் நீண்ட தூரம் பயணிக்க
நீவீர் கொள்ளும் பிடிவாதம்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கல்லூரி நட்பு.....

கண்மூடி முழிக்கையிலே
காலை பொழுதுபல
கடந்தே செல்லுது - தினம்
கணனியின் வேகத்தில்
கடிகாரத்தின் கால்களும்
கடின நடை போடுதிங்கே - ஆனால்
கல்லூரியில் கலந்து
கற்குந்தியில் உட்கார்ந்து
கதைபேசி மகிழ்ந்து
காரணமே இல்லாமல் - பல
கள்ளத்தனம் செய்த
காலத்தில் இனைந்த நட்பு.

காலத்தின் வேகத்திலே
கலந்து ஓடி விடாது
கயவர்களின் துற்றலுக்கு அஞ்சி
கரையொதுங்காது
கண்டம் கடந்து சென்றும்
கணியின் துணை நாடி - பாச
கணைகளை தொடுக்குதிங்கே

காலத்தின் பாதையிலே
காலன் அவன் கயிற்றினால்
கட்டுண்டு கல்லறைக்கு சென்றவரே
காற்றினிலே நீவிர் சொல்லும் சேதி
காதோரம் ஒலிக்கிறது.

கரைபோட முடியவில்லை - எண்ணு
கணக்கு எதும் இதற்கில்லை
காலதி காலமெல்லாம் கடந்து
காவியம் படைகிறது
கல்லூரி நட்பினிலே.....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தைமகள் வரவு.....

உலகத்துக்கு ஒளி கொடுத்து
உணர்வுக்கு உயிர் கொடுத்து
உழைப்புக்கு வழி கொடுத்து
உயர்வுக்கு கரம் கொடுத்து
உதிக்கின்ற செங்கதிரே - உனை
உளமகிழ்ந்து அழைக்கின்றார்
 உழவரெல்லாம்

தரணியெல்லாம் தமிழ் மணக்க
தானம் தர்மம் தழைத்தோங்க
தன்நிறைவு கொண்டே - இளம்
தலைமுறை வளம் பெற
தளர்வறிய உள்ளத்தோடு
தை மகளே உன்னை
தவமிருந்து அழைக்கின்றோம்

வளமது பெருக
நலமது சிறக்க - நம்
மனமது அன்பால் இணைய
அநீதி எங்கும் அகழ
இன்பம் தழைத்தோங்க
இனிய பொங்கல் திருநாளை
பெருமானை வேண்டி
நானும் வரவேற்று
வாழ்கின்றேன்..

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

காத்திருப்பு.......

வானத்து நிலவாக
வையத்தில் வந்திறங்கி - என்ன
வாழ்க்கை துணையாக
உள்ளத்தில் உறைந்தவளே
உன் நினைவளே - என்
எண்ணமெல்லாம் 
எல்லையற்று போகுதம்மா
கழிகின்ற கணம் ஒவ்வொன்றும் - உன்
கதை பேசுதம்மா
கனவில் மட்டுமல்ல
கண் திறந்து பார்க்கையிலும்
கண்ணாடி முன் நிற்கையிலும்
காணுகின்றேன் உன் உருவே
காதல் என்னும் இராச்சியத்தில்
பாசம் என்னும் வலைவீசி - எனை
கைது செய்தவளே
உனை கரம் பிடிக்கும் - அந்த
கணத்தை எண்ணி
காத்திருக்கிறேன் காதலுடன்....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வெளிநாடு நாடி....


உறவுகளைப் பிரிந்து
நினைவுகளைச் சுமந்து
காற்றினிலே பறந்து
கடல் எல்லைகளை கடந்து
இலட்சங்களை இழந்து
இலட்சியங்களை நிறைவேற்ற
வெளிநாடு நாடி-நானும்
வெளிக்கிட்டேன் பயணத்தை-இங்கு
உரிமைக்கு ஒருவரி
உறவுக்கு பல விதி
ஊனுறக்கம் இல்லமல்
உழைக்குது நம் ஜாதி
பராபட்சமில்லை-இங்கு
பழிக்கும் ஜாதியுமில்லை
பை நிறையப் பணம் வேண்டும்
பக்கத்தில் துணை வேண்டும்
பதினெட்டு வயதனால்
பண்பாட்டின் நிலையிதுவாம்
பட்டம் படிக்க வந்தவர்கள்
பாதியிலே நிறுத்திவிட்டு
தன் மானம் காத்து-தன்
தரணியிலே தலை நிமிர்ந்து வாழ
வருமானம் நாடி
வாடி நிற்க்கும் நிலையும் இங்கே
பிராஜவுரிமை பெற்றவர்க்கு
பெரிய துன்பம் எதுவிமில்லை
பிறக்கும் குழ்ந்தைக்கும்
பிற்கால செலவுக்கும்
பொறுப்பு அரசாங்கமாம்
நாடியே வந்திங்கு-பொருள்
தேடியே சேர்க்கின்றார்-தாம்
குடி வாழ்வதற்க்காய்........

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உடன்பிறப்பு...


ஓர் உயிர் தொடங்கி
ஆரூயிர் வரை
உதிக்கின்றன - பல
உயிர்கள் இந்த உலகத்திலேயே
ஆயிரம் ஆயிரம் உறவு கொண்டாடி
உரிமைகள் கூறி
கழிக்கின்றன தினம்
ஊரே கூடி நின்று
உறவடினாலும்
உரிமைகள் பல கூறி
உறவுகள் உருவானாலும்
உள்ளத்தில் இடம்பிடித்து
உன்துணை அவனானலும்
ஊரூ வரும் வேளையில்
உயிர் கொடுத்து உதவியதாலும்
உடன்பிறப்புக்கு ஈடாகுமாக - அவர் (கள்)
உடன்பிறப்பாய் - நான்
உதித்தமையால்
தாய்பால் மறந்து
தாய்மடி பகிர்ந்து
தந்தை தோள் இறக்கி
தன் மடியில் எனை தாங்கி
அன்பினிலே அரவணைக்கும்
அன்னை தந்தையாய்
ஆழமான அறிவுரையை
அழகாய் புகட்டும் ஆசானாய்
ஆடிப்பாடி ஆடம்பர செலவு செய்ய
ஆரூயிர் தோழியாய் இவ் உலகினிலே
நான் உயர்வாய் வாழ்வதற்காய்
எனை முந்திய வந்த உறவு
என் உடன்பிறப்பு....

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நினைவுகள்

நிஜங்களால் வரும்
மகிழ்ச்சியை விட
நினைவுகளால் வரும்
மகிழ்ச்சியே அதிகம். 
நிஜங்கள் ஒர் நாள்
நிசப்தமாய் போகலாம்-ஆனால்
நினைவுகள் நித்தம்
நிழழாடும் ஓவியங்களாய்
நிலைத்திருக்கும் என்றும்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS