அகரம்...
13:50 |
அன்னை மடியினிலே
அவதரித்த நாள் முதலாய்
அறிகின்றேன் பாரினிலே
அர்த்தங்கள் பல கொண்ட
அலைமோதும் அசைவுகளை
அனைத்து உயிர்க்கும்
அம்மா என்பது முதல் வார்த்தை - அதில்
அழகு தவழுது தனியாக
அன்பு பெருகுது
அணை போட முடியாமல்
அர்த்தமே காண முடியாத
அதிசய பொருட்கள் பலவாம்
அறிவும் அதில் ஒன்றாம்
அநியாயங்கள் பல நடக்குது - அதை
அடங்கவும் முடியவில்லை
அழிவை நாடிச் செல்ல
அவர்கள் தேடிச் சென்று
அயராது உழைக்கும் வழியது
அசைகின்ற பொருள் தொடங்கி
அசையா பொருள் வரையும்
அகிலத்தில் அனைத்திலுமே
அகரம் நடத்துதே
அரசாட்சி இங்கே..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னதான் இருந்தாலும் அம்மா போல் இருக்குமா அன்பு, இல்லையா........
சூப்பர் கவிதை....
நாஞ்சில் மனோ
வருகையை வரவேற்றே
வாழ்த்துகள் வரைந்ததற்கு
வழங்குகிறேன் நன்றியினை
Post a Comment