RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

தைமகள் வரவு.....

உலகத்துக்கு ஒளி கொடுத்து
உணர்வுக்கு உயிர் கொடுத்து
உழைப்புக்கு வழி கொடுத்து
உயர்வுக்கு கரம் கொடுத்து
உதிக்கின்ற செங்கதிரே - உனை
உளமகிழ்ந்து அழைக்கின்றார்
 உழவரெல்லாம்

தரணியெல்லாம் தமிழ் மணக்க
தானம் தர்மம் தழைத்தோங்க
தன்நிறைவு கொண்டே - இளம்
தலைமுறை வளம் பெற
தளர்வறிய உள்ளத்தோடு
தை மகளே உன்னை
தவமிருந்து அழைக்கின்றோம்

வளமது பெருக
நலமது சிறக்க - நம்
மனமது அன்பால் இணைய
அநீதி எங்கும் அகழ
இன்பம் தழைத்தோங்க
இனிய பொங்கல் திருநாளை
பெருமானை வேண்டி
நானும் வரவேற்று
வாழ்கின்றேன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..
Word verification நீக்கிவிடுங்கள்..

சிவரதி said...

தோழி பிரஷா ...நன்றிகள்

Post a Comment