புலம்பெயர் நாட்டிற்கு
புறப்பட்டு வந்தவரே-நீவீர்
பயணிக்கும் பாதையிலே
பள்ளங்கள் பலவிருக்கும்
பகலிரவு பாராமல்
பந்த சொந்தம் தேடமல்
பண்பாடு தனை மறந்து
பணத்துக்காக பறக்கின்ற
பலர் இங்கே...
சுற்றத்தார் மத்தியிலே
சுமையேதும் தெரியாமல்
சுகந்திரப் பறவையாய்
சுற்றித்திரிந்த உறவுகளே
சொர்க்க பூமியென நம்பி
சொந்தங்கள் துறந்து
சேர்த்து வைத்த சொத்தெல்லம்
செலவழித்து வந்த உறவுகளே
காலம் காலமாய்
கடந்து வரும் கொடுமையிது
உரிமைக்கு உணர்வில்லை
உறவுக்கு துணையில்லை
பணத்துக்காய் பக்கம் சாரும்
பகல் திருடர் மத்தியிலே
பாசத்தைப் பார்ப்பதெங்கே
காலத்தின் பாதையிலே
கடல் தாண்டி வந்தவரே
கஸ்டங்கள் பல கண்டு
கண் கலங்காதீர்
கடமைதனை கருமமாய் செய்து-நல்ல
காலம் வருமென காத்திருப்பீரே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment