RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

காத்திருப்பு.......

வானத்து நிலவாக
வையத்தில் வந்திறங்கி - என்ன
வாழ்க்கை துணையாக
உள்ளத்தில் உறைந்தவளே
உன் நினைவளே - என்
எண்ணமெல்லாம் 
எல்லையற்று போகுதம்மா
கழிகின்ற கணம் ஒவ்வொன்றும் - உன்
கதை பேசுதம்மா
கனவில் மட்டுமல்ல
கண் திறந்து பார்க்கையிலும்
கண்ணாடி முன் நிற்கையிலும்
காணுகின்றேன் உன் உருவே
காதல் என்னும் இராச்சியத்தில்
பாசம் என்னும் வலைவீசி - எனை
கைது செய்தவளே
உனை கரம் பிடிக்கும் - அந்த
கணத்தை எண்ணி
காத்திருக்கிறேன் காதலுடன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை்..
"காதல் என்னும் இராச்சியத்தில்
பாசம் என்னும் வலைவீசி - எனை
கைது செய்தவளே
உனை கரம் பிடிக்கும் - அந்த
கணத்தை எண்ணி
காத்திருக்கிறேன் காதலுடன்...."

சிவரதி said...

தோழி பிரஷா ...மிக்க நன்றிகள்.........

Post a Comment