அம்மா என்றிடும்
அரும் வார்த்தை
அகிலத்தில் ஒளிக்குது
அலையாக அதில்
அடங்கிடும் அர்த்தங்கள் ஏராளம்
அறிந்தவர் புரிந்வர் ஏராளம்
அவர் அணைத்திடும்
அன்பில் அழும் குழந்தை
அடங்குதே அழுகையை
அக மகிழ்ந்து
உருளுகின்ற உலகினிலே
பருவ வயதினிலே
உருவங்கள் மாறியே
உறவுகள் நிலைக்குதிங்கே - ஆனால்
அத்தனையும் அன்னை
அன்பிற்கு அடுத்தபடியே
வாழ்வில் என் நாளுமே....
3 comments:
//அத்தனையும் அன்னை
அன்பிற்கு அடுத்தபடியே
வாழ்வில் என் நாளுமே....//
அருமையான வார்த்தை...
நாஞ்சில் மனோ நன்றிகள்.....
அருமையான கவிதை...
Post a Comment