மரத்தடியில் ஒன்று கூடி
மணப்பரப்பில் வீடுகட்டி
மகிழ்ந்த பருவம் கழிகையிலே
மனதினிலே துளிர்விடுதே
மறுபட்ட எண்ணம் பல
வண்ணப் பருவங்களில் வரும்
எண்ணங் குவியல்களில்
சின்னக் கனவுகளில்-அங்கே
அழகாய் காதல் மலர்கிறதே
அரும்பு வயதினிலே
அரியப் பருவத்திலே
எறுப்புகள் போல்
துள்லித் திரிகையிலே
எதிர் பாரமலே அங்கே
அன்பெனும் பெயரினிலே
காதல் மலர்கிறதே
பள்ளி வயதினிலே
பருவ மாற்றத்தால்
பார்வைகள் இடம்மாற
எதிர் பாலர் மேல் கொண்ட
பாசத்தின் வடிவினிலே
காதல் மலர்கிறதே
இருபது வயதினிலே
இளமையின் பிடியினிலே
இரு உள்ளங்கள் அங்கே
இதயங்கள் பாரிமாறியதால்
இடையூறு பல தாண்டி இனிய
காதல் மலர்கிறதே
ஆடிய ஆட்டம் ஓய்ந்து
ஆசைகள் பலவும் தீர்ந்து
அனுபவங்கள் பல பெற்று
ஆதாரவு பெற்ற இடத்தே
அன்பினை நாடியதால்
ஆறுபது வயதிலும் அருமையாய்
காதல் மலர்கிறதே
அன்பு என்னும் அருவியிலே
அடித்து வந்த அணுவளவு ஆலம்விதை
ஆகாயம் வரை வளர்ந்து
விழுதுகள் பல பரப்புவது போல்
அகிலமதில் எங்கும் காதல்
அணைத்து உயிரிலும்
படர்ந்து மணம் பரப்புகிறதே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment